Type Here to Get Search Results !

இராமநாதபுரம் மன்னர் வாரிசு அதிரடி திமுக அதிர்ச்சி….!

திமுகவை சேர்ந்த தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி தற்போது தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. ஈஷா மையத்திற்கு எதிராக தொடர்ச்சியாக கருத்துக்களை அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள, பழனிவேல் தியாகராஜன், சேகர் பாபு உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வந்தனர்.
ஒரு படி மேலே சென்று ஜக்கி வாசுதேவ் குறித்து கடுமையாக வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருந்தார் பழனிவேல் தியாகராஜன், இந்நிலையில் ஜக்கி வாசுதேவின் கருத்திற்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவிக்க தொடங்கியுள்ளனர், ஜக்கி வலியுறுத்திய கோவில்கள் பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக ராமநாதபுரம் மன்னர் வாரிசு கருத்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த சேதுபதி மன்னர் வம்சத்தின் வாரிசு ஆர்.எஸ்.ஆர்.ராம்பிரசாத் தி இந்து நாளிதழுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் “இராமநாதபுரத்தைச் சுற்றியுள்ள 56 கோவில்களை நிர்வகித்த இராமநாதபுர சமஸ்தானத்தின் வாரிசு நான். எனது அக்கா/அண்ணன் மகள் நிர்வாகக் குழுவின் தலைவராக இருக்கிறார்.
எனினும் அதிகாரம் முழுக்க அறநிலையத் துறையின் கையிலேயே உள்ளது. எனவே அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.”கோவில்களை அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து அவற்றை நிர்வகிக்க அவற்றுடன் தொடர்புடைய குடும்பத்தினர், உள்ளூர்வாசிகளை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைப்பது கோவில்களைப் பாதுகாப்பதில் பெரும் உதவியாக இருக்கும்.
சில கோவில்களை வந்து பார்த்தால் தெரியும் அவை எவ்வளவு மோசமான நிலையில் இருக்கின்றன என்று. திரு.தியாகராஜன் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை அரசுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். அது‌ தானே அனைவருக்கும் நியாயமாக இருக்கும்? ஏன் இந்த ஒரு தலைப்பட்சம்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
ஏற்கனவே திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று பலரும் குற்றம் சுமத்தி வரும் நிலையில், கோவில் விஷயத்தில் கருத்து தெரிவித்து இப்போது கட்சிக்கு மேலும் சிக்கல் உண்டாவதை அறிந்து திமுக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.