Type Here to Get Search Results !

அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் இணைந்து செயல்பட விரும்பும் வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்

%25E0%25AE%25B5%25E0%25AE%259F%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%2B%25E0%25AE%25A4%25E0%25AE%25B2%25E0%25AF%2588%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B%25E0%25AE%259C%25E0%25AE%25BE%25E0%25AE%2599%25E0%25AF%258D-%25E0%25AE%2589%25E0%25AE%25A9%25E0%25AF%258D அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் இணைந்து செயல்பட விரும்பும் வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்
வட கொரியாவின் அணு ஆயுத இருப்பு குறித்து பெருமைப்படும் வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன், அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடனுடன் இணைந்து தனது நாட்டின் பொருளாதாரத் தடைகளை தளர்த்த விரும்புகிறார்.
டொனால்டு டிரம்ப் அதிபராக இருந்தபோது, அணுசக்தி திட்டம் தொடர்பான தீர்வு ஏதும் எட்டப்படவில்லை. 2019, ஜூன் மாதத்தில், டொனால்ட் டிரம்ப்  கிம் ஜாங்-உன்  (Kim Jong Un) சந்திப்பு நடைபெற்றது. கிம் ஜாங்-உன்னை சந்தித்த முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்களது சந்திப்பின் முக்கிய நோக்கம் நிறைவேறவில்லை.
தற்போது கிம் ஜாங்-உன், ஜோ பிடனுடன் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்க வேண்டும். அண்மையில் கிம் தனது மக்களுக்கு ஆற்றிய உரைகளில், நாட்டின் அணு ஆயுத திட்டத்தை வலுப்படுத்துவதாக உறுதியளித்தார். அமெரிக்கா தனது கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறுகிறார் கிம்.  
கோவிட் -19 (COVID-19) பாதிப்பு, ஐ.நா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது என வட கொரியாவின் பொருளாதாரம் தற்போது சீர்குலைந்துப் போயுள்ளது. தற்போது, டொனால்ட் டிரம்பிடம் இருந்து மாறுபட்ட அணுகுமுறையைக் கொண்டிருக்கும் ஜோ பிடனுடன் கிம் ஜாங் உன் புதிய முயற்சிகளைத்தொடங்க வேண்டும்.
பியோங்யாங்கில் அண்மையில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்புகளில் வட கொரியாவின் புதிய ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. அதனால், கொரிய தீபகற்பத்தில் பதட்டங்கள் அதிகரித்தன. வட கொரியாவிடம் ஆயுத பலம் இல்லாவிட்டால், நாட்டிற்கு ஆபத்து என கிம் ஜாங்-உன் கருதுகிறார். எனவே, தனது அணுசக்தி திட்டத்தை கைவிட அவர் முன்வருவது சந்தேகமே. 
கிம் ஜாங்-உன்னின் அணு ஆயுத சேகரிப்பு, அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, அதன் நட்பு நாடுகளுக்கும் கூட பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. எனவே, வட கொரியா (North Korea) மீது பல நாடுகளும் அவநம்பிக்கை கொண்டுள்ளன. ஆனால், வட கொரியா தனது இருப்பை உணர்த்த விரும்புகிறது. தற்போது சீனா மட்டுமே அதன் ஒரே முக்கியமான நட்பு நாடாக இருக்கிறது. 
எனவே தற்போது கிம் ஜாங்-உன் பிற நாடுகளுடனான உறவை மேம்படுத்த திட்டமிட்டுள்ளார்.அமெரிக்காவும் அதன் நட்பு நாடான தென் கொரியாவும் மார்ச் மாதத்தில் கூட்டு ராணுவப் பயிற்சியை நடத்துமா என்பதை பொறுத்து கிம் ஜாங் உன் காயை நகர்த்துவார் என்று கூறப்படுகிறது.  

The post அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் இணைந்து செயல்பட விரும்பும் வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் appeared first on தமிழ் செய்தி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.