Type Here to Get Search Results !

நாடாளுமன்றம் நோக்கி மேற்கொள்ளவிருந்த பேரணி ரத்து விவசாயfள் அறிவிப்பு..!

%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B%25E0%25AE%25A8%25E0%25AF%258B%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BF%2B%25E0%25AE%25AE%25E0%25AF%2587%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25B3%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%2B%25E0%25AE%25AA%25E0%25AF%2587%25E0%25AE%25B0%25E0%25AE%25A3%25E0%25AE%25BF%2B%25E0%25AE%25B0%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581 நாடாளுமன்றம் நோக்கி மேற்கொள்ளவிருந்த பேரணி ரத்து விவசாயfள் அறிவிப்பு..!
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் நீட்சியாக செவ்வாய்க்கிழமை தில்லி நோக்கி மாபெரும் டிராக்டர் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி வன்முறையில் முடிந்தது.
இந்த நிலையில் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி மேற்கொள்ளவிருந்த பேரணியை ஒத்திவைப்பதாக விவசாய சங்கங்கள் முடிவெடுத்துள்ளன.
சிங்கு எல்லையில் சம்யுக்த கிசான் மோர்ச்சா உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த செய்தியாளர் சந்திப்பு புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது விவசாயத் தலைவர் பால்பீர் எஸ் ராஜேவால் தெரிவித்தது:
“தியாகிகள் தினத்தன்று நாடு முழுவதும் பேரணி மேற்கொள்ளவுள்ளோம். ஒருநாள் உண்ணாவிரதமும் மேற்கொள்ளவுள்ளோம். பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி மேற்கொள்ளவிருந்த பேரணி நேற்றைய வன்முறை காரணமாக தற்போதைக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
போராட்டத்தைக் கலைக்க முயற்சித்தபோதும் 99.9 சதவிகித விவசாயிகள் அமைதி காத்தனர். சில சம்பவங்கள் அரங்கேறின. எங்களுக்கு தடுப்புகள் இருந்தன. பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டிக்கு அவை இல்லை.”
முன்னதாக, போராட்டத்திலிருந்து விலகுவதாக ராஷ்ட்ரீய விவசாயிகள் மஸ்தூர் சங்கதன் அமைப்பு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

The post நாடாளுமன்றம் நோக்கி மேற்கொள்ளவிருந்த பேரணி ரத்து விவசாயfள் அறிவிப்பு..! appeared first on தமிழ் செய்தி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.