Type Here to Get Search Results !

7 ஆம் தேதி ஊரடங்கு முடிவு…. கடைகள் திறக்க முடியுமா…. Curfew ends on the 7th …. Can shops be opened ….

 

தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி முதல் காய்கறி, மளிகை முதல் கடைகள் திறக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் கொரோனாவின் தீவிரம் குறையாத நிலையில் மே 24 முதல் 31 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பின்னர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதால் மே 31 ஆம் தேதியிலிருந்து ஜூன் 7 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு உடனான ஆலோசனைக்கு பின் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளரை சந்தித்தார். அப்போது, வரும் 7 ஆம் தேதி காலை போது ஊரடங்கு முடிவுக்கு வருவதால் கொரோனா குறைவாக உள்ள மாவட்டங்களில் கடைகளை திறக்க அனுமதிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


கடந்த முறை தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தபோது காலை 6 மணி முதல் 10 மணி வரை கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால்,இந்த முறை கடைகள் திறக்கப்பட்டால் காலை 6 மணி முதல் 10 மணி என்பதை மேலும் சில மணி நேரம் அதிகரிக்க வேண்டும் என்று தலைமைச் செயலரிடம் கோரிக்கையை வைத்ததாக அவர் தெரிவித்தார். 7 ஆம் தேதி ஊரடங்கு முடிவதால் அடுத்த கட்டமாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.