Type Here to Get Search Results !

திமுக கூட்டத்தால் கொரோனா பரவும் அபாயம்…? ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் ஒன்றுகூடிய மக்கள்…..! Danger of spreading corona by DMK meeting …? People who came together despite the curfew …..!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் அதை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் ஊரடங்கை அறிவித்தார். ஆனால் இந்த நிலையில், நலத்திட்டம் வழங்குதல் என்ற பெயரில் தி.மு.க-வின் அமைச்சரே 700 பேருக்கு மேல் மக்கள் கூட்டத்தை கூட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி, கருமண்டபத்தில் தி.மு.க சார்பில் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் 200 பேர் என மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் போன்ற நிபந்தனைகளை பின்பற்ற வலியுறுத்தியும், நலத்திட்ட உதவிகள் வாங்கும் போது மக்கள் சமூக இடைவெளியை மறந்து, முண்டியடித்து பொருட்களை வாங்கிச் சென்றனர். அதே போல் அங்கு கலந்து கொண்ட திமுக நிர்வாகர்கள் பலர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தது மிகவும் வேதனையாக உள்ளது.
மக்கள் அதிகாமாக பொது வெளியில் கூடுவதால் கொரோனா அதிகமாக பரவுகிறது என்பதால் தான் ஸ்டாலின் ஊரடங்கை அறிவித்தார், ஆனால் அவருடைய கட்சியின் அமைச்சர் மற்றும் தொண்டர்களே அதனை பின்பற்றாமல் இருப்பது அவர்களின் மதிப்பு தன்மையை காட்டுகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. நலத்திட்டங்கள் வழங்குவதாக இருந்தால் கட்சியினர் மூலம் வீடு வீடாக சென்று நலத்திட்ட உதவிகள் செய்திருக்கலாம். ஆனால் இவ்வாறு 700 க்கும் மேற்பட்ட மக்கள் சமூக இடைவெளியின்றி கூடுவது மேலும் கொரோனா பரவலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.