Type Here to Get Search Results !

இலவசமாக வேக்சின் வழங்கும் முடிவை வரவேற்கிறேன்…. முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு பாராட்டு… I welcome the decision to provide the vaccine for free …. Chief Minister Stalin praises Prime Minister Modi …

மாநிலங்களுக்கு இலவசமாக வேக்சின் வழங்கும் முடிவை வரவேற்கிறேன், அதே சமயம் வேக்சின் ரிஜிஸ்டிரேஷன், விநியோகம் உள்ளிட்டவற்றில் மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
பிரதமர் மோடி நாடு முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக வேக்சின் கொடுப்பதாகவும், இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை விநியோகிக்கும், முழுமையாக மத்திய அரசே நடத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை வினியோக்கும், முழுமையாக மத்திய அரசே நடத்தும் என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வேக்சினில் 75% மத்திய அரசு மூலம் வாங்கப்பட்டு மாநில அரசுகளுக்கு தரப்படும். ஜூன் 21 முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் அறிவிப்பை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மாநிலங்களுக்கு இலவசமாக வேக்சின் வழங்கும் முடிவை வரவேற்கிறேன் இந்தியாவில் உற்பத்தியாகும் 75% வேக்சினை வாங்க ஒன்றிய அரசே முடிவு வரவேற்க கூடியது. வேக்சின் தொடர்பான முந்தைய நிலைப்பாட்டை பிரதமர் மோடி மாற்றிக்கொண்டதை பாராட்டுகிறேன்.
வெளிநாடுகளிலிருந்து வேக்சின் வாங்க முடிவு.. சோதனை நிலையில் மேலும் 3 தடுப்பூசிகள்.. பிரதமர் பேச்சு!
அதே சமயம் சுகாதாரத்துறை என்பது மாநில கட்டுப்பாட்டிற்கு கீழ் வர கூடியது. இதை பிரதமரே பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். இதனால் வேக்சின் ரிஜிஸ்டிரேஷன், மக்களுக்கு நேராக விநியோகம் செய்வது உள்ளிட்டவற்றில் மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் வழங்குவதுதான் சரியாக இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.