Type Here to Get Search Results !

அமைச்சர் செந்தில் பாலாஜி… மின்கம்பிகளில் கொடிகள் படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின்தடை ஏற்படுகிறது…. ராமதாஸ் கண்டனம் Minister Senthil Balaji… Squirrel spreads flags on power lines and ‘run out’ causes power outages condemnation of ramadan…

மின்கம்பிகளில் கொடிகள் படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின்தடை ஏற்படுகிறது என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்த கருத்தை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் பல நகரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. முந்தைய அதிமுக ஆட்சியில் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. அதனால் மின்வெட்டு ஏற்படுகிறது என்பது தற்போதைய திமுக அரசின் விளக்கம்.
மேலும் இது தொடர்பாக விளக்கம் அளித்திருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, சில இடங்களில் செடிகள் வளர்ந்து கம்பிகளோடு மோதும் போது அதில் அணில்கள் ஓடும். அந்த அணில்கள் ஓடும் போது இரண்டு லைன்கள் ஒன்றாகி மின்சார தடை ஏற்படும் என கூறியிருந்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் இந்த கருத்தை டாக்டர் ராமதாஸ் விமர்சித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவு:
மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி – விஞ்ஞானம்…. விஞ்ஞானம்….!
சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ?

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.