Type Here to Get Search Results !

கூடுதல் விழிப்புடன் இருக்க தமிழக டிஜிபி திரிபாதி போலீசாருக்கு உத்தரவு ….! சர்ச்சைக்குரிய மசோதா தாக்கல் ..! Tamil Nadu DGP Tripathi police ordered to be extra vigilant ….! Controversial bill filed ..!

மே20 அன்று இலங்கை அரசு “Colombo port City economic commission” மசோதாவை தாக்கல் செய்தது.இந்த மசோதா கொழும்பு துறைமுக நகரத்தையே சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வழிவகை செய்கிறது. அதனை தொடர்ந்து தமிழக டிஜிபி திரிபாதி தமிழகமெங்கும் காவல்துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தினார்.
சீன அரசு கொழும்பு துறைமுகத்தில் 1.4 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளது.துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் சென்றால் இறையாண்மை பாதிக்கும் என அரசியல் நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்திருந்த நிலையில்….
ராஜபக்சே இதனை மறுத்துள்ளார். அந்நிய முதலீடுகளை ஈர்க்கவும் முதலீட்டு வாய்ப்புகளை பலப்படுத்தவுமே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது என கூறினார்.இதற்கு தமிழீழ அமைப்பு மற்றும் இலங்கை எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.தமிழகத்தில் வைகோ உட்பட சிலர் இந்த சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
இலங்கை சம்பவங்களை கவனத்தில் கொண்டு தமிழக டிஜிபி திரிபாதி அவர்கள் தமிழகத்தில் செயல்படும் சீன நிறுவனங்கள் மற்றும் சீன தூதரகம் ஆகியவற்றின் முன்னால் எந்த ஒரு போராட்டமோ அசம்பாவிதமோ நடைபெறுவதற்கான முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
“திமுகவை சார்ந்த பெரும்புள்ளிகள் சிலர் இலங்கையில் முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அதனால் தானோ என்னவோ வைகோ கடந்த சில நாட்கள் முன்பு சீனாவை கண்டித்தார்”என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.