Type Here to Get Search Results !

ஜன.30-ம் தேதி நடைபெற உள்ள ஜெயலலிதா கோயில் திறப்பு விழாவில் 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள்… அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

%25E0%25AE%2585%25E0%25AE%25AE%25E0%25AF%2588%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2B%25E0%25AE%2586%25E0%25AE%25B0%25E0%25AF%258D.%25E0%25AE%25AA%25E0%25AE%25BF.%25E0%25AE%2589%25E0%25AE%25A4%25E0%25AE%25AF%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D ஜன.30-ம் தேதி நடைபெற உள்ள ஜெயலலிதா கோயில் திறப்பு விழாவில் 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் ஜெயலலிதா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு 7 அடி உயரத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இக்கோயில் வளாகத்தில் தியான மண்டபம், பூங்கா ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதா கோயிலை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரும் 30-ம் தேதி திறந்து வைக்கின்றனர். திருமங்கலம் தொகுதி முழுவதும் மக்களை நேரில் சந்தித்து திறப்பு விழா அழைப்பிதழை அமைச்சர் உதயகுமார் வழங்கி வருகிறார்.
விழாவுக்கான முகூர்த்தக்கால் பந்தல் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:
எத்தனையோ தலைவர்கள் வாழ்ந்து மறைந்தாலும், அவர்களை தெய்வமாகத் தொண்டர்கள் வணங்குவதில்லை. அதிமுகவில்தான் தலைவர்களை தெய்வமாகத் தொண்டர்கள் வணங்குகின்றனர். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மதுரை மக்களை மிகவும் நேசித்தனர். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை மதுரையில்தான் முதல்வர் பழனிசாமி தொடங்கினார்.
ஜன.30-ம் தேதி நடைபெறும் கோயில் கும்பாபிஷேக விழாவில் 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள். அப்போது பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வரும், துணை முதல்வரும் வழங்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஜன.30-ம் தேதி நடைபெற உள்ள ஜெயலலிதா கோயில் திறப்பு விழாவில் 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள்… அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் appeared first on தமிழ் செய்தி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.