Type Here to Get Search Results !

தேசியக் கொடியை அகற்றியவர்களை சுட்டுத்தள்ள வேண்டும்.. அர்ஜுன் சம்பத் ஆவேசம்…!

%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%259C%25E0%25AF%2581%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2B%25E0%25AE%259A%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25A4%25E0%25AF%258D%2B%25E0%25AE%2586%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%259A%25E0%25AE%25AE%25E0%25AF%258D தேசியக் கொடியை அகற்றியவர்களை சுட்டுத்தள்ள வேண்டும்.. அர்ஜுன் சம்பத் ஆவேசம்...!
மன்னர் திருமலை நாயக்கர் 438 வது பிறந்தநாள் விழாவிற்கு வருகை தந்த அர்ஜுன் சம்பத் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் முழுவதும் இஸ்லாமிய படையெடுப்பு காலங்களில் எடுக்கப்பட்ட கோவில்கள். இதையெல்லாம் மீட்டு உருவாக்கம் செய்தவர் திருமலை நாயக்கர் வம்சத்தை சேர்ந்தவர்கள். நாயக்கர் ஆட்சியில் ஆன்மீகம் வளர்ந்தது.தமிழை வளர்த்து அதனை காத்தவர் திருமலை நாயக்கர், நாம் தமிழர் அமைப்பு நாயக்கர் தமிழர் இல்லை என்று பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். சீமானை விட அதிகமாக தமிழை வளர்த்தவர் நாயக்கர், 
ஆன்மீக அரசியலுக்கு உதாரணமாக கொண்டவர் நாயக்கர், மதமாற்றம் தடை செய்யப்பட வேண்டும், கோவில்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அதற்கு உதாரணமாக இருக்கும் திருமலை நாயக்கர் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்,பாகிஸ்தான், சீனா தூண்டுதலின் பெயரில் விவசாயிகள் டிராக்டர் பேரணி செங்கோட்டையில் தேசியக் கொடியை அகற்றிவிட்டு பிரிவினைவாத கொடியை ஏற்றி உள்ளனர். அவர்களை சுட்டுத் தள்ளி இருக்க வேண்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷா இதை கையில் எடுத்திருக்க வேண்டும். அமித்ஷா மோடி இரும்பு கரம் கொண்டு கலவரத்தை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.எந்த காரணத்தைக் கொண்டும் வேளாண் சட்டத்தை பின்வாங்கக் கூடாது, கொடைக்கானலில் குடியரசு தினம் கொண்டாடிய இப்ராகிம் கடுமையாக தாக்கப்பட்டு  இருக்கிறார். அதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம், 
ஜல்லிக்கட்டை தடை செய்த ராகுல் காந்தி ஜல்லிக்கட்டைப் பார்க்க வந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து மதுரைக்கு வந்தவர் பத்து நாட்கள் தனிமை படுத்தி கொள்ளாமல் அரசியல் செய்வதற்காக மதுரைக்கு வந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் கொள்கையை பேசாமல்  ஒருமையில் பேசினார். தமிழகத்திற்கு மீண்டும் வந்தால் கருப்பு கொடி காட்டுவோம். ரஜினிகாந்த் அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ளார். அவர் ஆன்மீக அரசியல் கொள்கையில் இருந்து ஒதுங்கவில்லை. 234 தொகுதிகளிலும் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலை இந்த மக்கள் கட்சி எடுத்து செல்லும், ரஜினி ரசிகர்களை விலைக்கு வாங்கி திசை திருப்புவதற்கு திமுக முயற்சி செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தேசியக் கொடியை அகற்றியவர்களை சுட்டுத்தள்ள வேண்டும்.. அர்ஜுன் சம்பத் ஆவேசம்…! appeared first on தமிழ் செய்தி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.