Type Here to Get Search Results !

பார்லிமென்டில், விவாதங்கள் ஆக்கப்பூர்வமானதாக அமைய வேண்டும் : பிரதமர் மோடி

%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D%2B%25E0%25AE%2586%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%2595%2B%25E0%25AE%2585%25E0%25AE%25AE%25E0%25AF%2588%25E0%25AE%25AF%2B%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D பார்லிமென்டில், விவாதங்கள் ஆக்கப்பூர்வமானதாக அமைய வேண்டும் : பிரதமர் மோடி
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர், இன்று துவங்கிய நிலையில், பார்லிமென்ட் வளாகத்தில் நிருபர்களை சந்தித்த பிரதமர் மோடி கூறியதாவது: 2021ம் ஆண்டின் முதல் தொடர் என்பதால், முக்கியமான கூட்டத்தொடராகும். இந்தியாவிற்கு சிறந்த எதிர்காலம் கிடைக்க, இந்த ஆண்டு முக்கியமானது. சுதந்திர போராட்ட வீரர்கள் கண்ட கனவை நிறைவேற்ற, நமது நாட்டின் முன்பு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தொடரை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். தேசத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப விவாதத்தில் பங்கெடுத்து கொள்ள வேண்டும். மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் எந்த தடையும் இருக்கக்கூடாது.
இது பட்ஜெட் கூட்டத்தொடர். இந்தியாவின் வரலாற்றில், 2020ம் ஆண்டில், பல்வேறு சலுகைகள் வாயிலாக 5 மினி பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ளார். அந்த மினி பட்ஜெட்டை ஒரு அங்கமாக இந்த பட்ஜெட் இருக்கும் என நம்புகிறேன். பார்லிமென்டில், விவாதங்கள் ஆக்கப்பூர்வமானதாக அமைய வேண்டும். கூட்டத்தொடர் சுமூகமாக நடக்க உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஜனநாயகத்தை காக்கும் வகையில் எம்.பி.,க்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பார்லிமென்டில், விவாதங்கள் ஆக்கப்பூர்வமானதாக அமைய வேண்டும் : பிரதமர் மோடி appeared first on தமிழ் செய்தி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.