Type Here to Get Search Results !

தானும் மக்களோடு மக்களாக தடுப்பூசி போட்டுக்கொள்வேன்…. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசியை மத்திய அரசு அதிக அளவில் கொள்முதல் செய்து ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அனுப்பி உள்ளது. நாடு முழுவதும் இந்த தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைத்துள்ளார். அந்தந்த மாநிலங்களில் முதல்-அமைச்சர்கள் தொடங்கி வைக்கிறார்கள். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் தொடங்கி வைத்துள்ளார். அதற்கான நிகழ்ச்சி மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்றது. தடுப்பூசி திட்டத்தை தொடக்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 
உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனோ தொற்றுக்கு எதிராக  பாரத பிரதமர் எடுத்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது.பிரதமருக்கு தமிழக அரசு சார்பில் வாழ்த்துக்கள். பிரதமர் கொரோனோ தடுப்பூசியை நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார். முதல்வர் முதல் முறை கோரோனோ தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் 28 நாட்கள் கழித்து 2வது முறை  மீண்டும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். சுமார் 226 இடங்களில் ஒத்திகை செய்யப்பட்டு இது தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. கொரோனோ தடுப்பூசி என்பது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்றார். நீங்கள் கொரோனோ தடுப்பூசி போட்டு கொள்வீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இந்திய நாட்டை பாதுகாக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும், நானும் கொரோனோ தடுப்பூசி செலுத்தி கொள்வேன். 
இப்போது முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனோ தடுப்பூசி செலுத்தப்படுகிறது அகில இந்திய அளவில் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ சங்க தலைவர்களே தடுப்பூசியை செலுத்தி கொள்ளும் நிலையில்,  சாதாரண மக்கள் இது குறித்து தேவையின்றி அச்சப்பட தேவையில்லை. மக்கள் மத்தியில் துவக்கத்தில் அச்சம் இருந்தாலும் பின்னர் அச்சம் நீங்கும். மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள அரசு வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். மீண்டும் கொரோனோ பாதிப்பு ஏற்பட்டால் கடும் சிரமம் ஏற்படும் என்பதால் மக்கள் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். என்றார்.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.