Type Here to Get Search Results !

இன்று காலை 11:30 க்கு தமிழகம் வர இருக்கும் பாரத பிரதமரை வரவேற்க ஒரு லட்சம் பாஜக தொண்டர்கள்...!

 


இன்று காலை 11:30 க்கு தமிழகம் வர இருக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வரவேற்க ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் நேப்பியர் பாலம் அருகிலிருந்து நேரு உள்விளையாட்டு அரங்கம் வரை சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனதாக தமிழக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி இன்று சென்னை வர உள்ளார் 11:30 மணிக்கு விமான நிலையம் வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறுக்கு சென்று அங்கிருந்து கார் மூலம் நேரு ஸ்டேடியம் வரவுள்ளார். 12 மணி அளவில் சென்னை மெட்ரோ ரயில் வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் வழி தடத்தை தொடங்கி வைக்கும் அவர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார், மீண்டும் 1 மணி அடையாறு விமான தளத்தை அடைந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விமான நிலையம் செல்கிறார்.  இந்நிலையில் பிரதமர் தரை மார்க்கமாக பெரியமேடு நேரு ஸ்டேடியத்திற்கு வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடியின் இன்றைய நிகழ்ச்சியில் முக்கிய அரசியல் அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளும் பிரதமரின் இன்றைய உரையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அதேவேளையில் அதிமுக மற்றும் பாஜக சார்பில் பிரதமரை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 

இன்று காலை  தமிழகம் வர இருக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வரவேற்க 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் நேப்பியர் பாலம் அருகிலிருந்து நேரு உள்விளையாட்டு அரங்கம் வரை சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர். ஏறத்தாழ 15க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழகத்தின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. 

பாரதப் பிரதமர் தமிழகத்தின் மக்கள் நலத்திட்டங்களை தொடக்கி வைத்து உள்விளையாட்டு அரங்கில் நிகழ்ச்சி நிறைவடைந்ததும் ஹெலி பேட்க்கு செல்லும்போது  பாஜக தொண்டர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் பிரதமரை மகிழ்ச்சியுடன் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளுடன் வழி அனுப்ப உள்ளனர். தமிழக பாஜக மாநில தலைவர் வெற்றிவேல் நாயகன் டாக்டர் L.முருகன் அவர்கள் காலை 9 மணி முதல் 10 மணிக்குள் பாரத பிரதமரை வரவேற்க அணிவகுத்து நிற்கும் பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்தி‌ சந்திக்கவுள்ளார்.  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.