Type Here to Get Search Results !

சென்னையில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் மார்க்-1 ஏ போர் பீரங்கி... நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்....

 


சென்னை ஆவடியில் உள்ள டிஆர்டிஓ போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, பின்னர் மேம்படுத்தப்பட்டது அர்ஜூன் கவச வாகனம். உலகில் உள்ள டாங்கிகளில் மிக துல்லியமாக தாக்குல் திறன் கொண்டது அர்ஜூன் எம்கே 1 ஏ. இதில் அப்போதில் இருந்து பயன்படுத்தப்பட்டு வரும் காஞ்சன் கவசத்துடன், டிஆர்டிஓ உருவாக்கிய ரியாக்டிவ் கவசமும் பொருத்தப்பட்டுள்ளது.


இந்த அர்ஜூன் எம்கே 1 ஏ இரவு மற்றும் பகல் நேரங்களில் இலக்கினை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. 10.16 மீட்டர் நீளமும், 68 டன் எடையும் கொண்ட இந்த கவச வாகனம் மணிக்கு 58 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். 360 டிகிரி சுழன்று இலக்குகளை தாக்கும். இதில் பொருத்தப்பட்டுள்ள 120 எம்எம் ரைபிள் மூலம் நொடிக்கு 6 முதல் 8 சுற்றுகள் சுட முடியும். இரவு நேரங்களில் ஓட்டுநர் எதிரே பார்க்கும் வகையில் Night Vision அர்ஜூன் எம்கே 1 ஏ கவச வாகனத்தில் இருக்கிறது. இதில் 4  பேர் பயணிக்கலாம்.


இந்நிலையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய வசதிகளுடன் கூடிய அர்ஜுன் மாக் 1ஏ டாங்க் வாகனத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அர்ஜுன் மாக் 1ஏ பீரங்கி ராணுவ டாங்க் முன் நின்று பிரதமர்மோடி புகைப்படம் எடுத்து கொண்டார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.