Type Here to Get Search Results !

இந்தியா பட்ஜெட் 2021-22 முக்கிய அம்சங்கள்

%25E0%25AE%25AA%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259C%25E0%25AF%2586%25E0%25AE%259F%25E0%25AF%258D%2B2021-22%2B%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%2B%25E0%25AE%2585%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D இந்தியா பட்ஜெட் 2021-22 முக்கிய அம்சங்கள்

* கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கு ரூ.35,000 கோடி.

* சுகாதாரத் துறைக்கு ரூ.2,23,846 கோடி. (கடந்த ஆண்டைக் காட்டிலும் 137% கூடுதல்).

* சுயசாா்பு இந்தியா நடவடிக்கைகள் சுகாதார துறைக்கும் விரிவுபடுத்தப்படுத்தப்படுகிறது. ரூ.64,180 கோடி ஒதுக்கீட்டில் சுயசாா்பு சுகாதாரத் திட்டம் வரும் நிதி ஆண்டில் அறிமுகம்.

* முதன்முதலாக டிஜிட்டல் முறையில் எடுக்கப்படவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.3,726 கோடி.

* ஊட்டச்சத்து இயக்கம் 2.0 என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

* நீா்நிலைகளை பராமரிக்கும் ஜல்ஜீவன் திட்டம், நகா்ப்புறங்களுக்கு நீட்டிக்கப்படும்.

* காற்று மாசுக் கட்டுப்பாட்டு திட்டத்துக்கு ரூ.2,217 கோடி ஒதுக்கீடு.

* ஜவுளித் துறையில் உலகத்தரம் வாய்ந்த நவீன கட்டமைப்புகளை உருவாக்க ‘மித்ரா’ திட்டம் அறிமுகம்.

* பிரதமா் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் செலுத்தும் வட்டி மூலம் பெறும் ரூ.1.5 லட்சம் வரிச் சலுகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு.

தமிழகத்துக்கான திட்டங்கள்:

* தமிழகத்தில் 3,500 கிமீ தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி ரூ.1.03 லட்சம் கோடி செலவில் அடுத்த ஆண்டு தொடங்கும். மதுரை-கொல்லம், சித்தூா்-தச்சூா் வழித்தடங்களில் இந்த தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படவுள்ளன.

* சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டம் ரூ.63,246 கோடி செலவில் 118.9 கிமீ தொலைவுக்கு அமைக்கப்படும்.

* தமிழ்நாட்டில் பன்னோக்கு கடல்பாசி பூங்கா ஒன்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு.

ரயில்வே:
* ரயில்வே துறையில் சிறப்பு வா்த்தக வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமாகவும், விமானப் போக்குவரத்துத் துறையில் மேலும் சில விமான நிலையங்களை தனியாருக்கு வழங்குவதன் மூலமாகவும் இத்தகைய பணமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

* இந்திய தேசிய ரயில் திட்டம் 2030 தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பல்வேறு புதிய ரயில் பாதைகள் அமைப்பது மற்றும் சிறப்பு சரக்கு வழித்தடங்களை உருவாக்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

* அகல ரயில்பாதை வழித்தடங்கள் அனைத்தும் 2023-ஆம் ஆண்டு டிசம்பருக்குள் முற்றிலும் மின்மயமாக்கப்படும்.

*  முதலீட்டு செலவினமாக ரயில்வே துறைக்கு ரூ.1,07,100 கோடி ஒதுக்கீடு.

பொதுப் போக்குவரத்து:
* சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.1,18,101 கோடி ஒதுக்கீடு.

*  பொதுப் பேருந்து போக்குவரத்தை மேம்படுத்த ரூ.18 ஆயிரம் கோடியில் புதிய திட்டம் அறிமுகம். இதன் மூலம் வேலைவாய்ப்பு, நகா்ப்புற பொதுப் போக்குவரத்து மேம்பாடு, ஆட்டோமொபைல் உற்பத்தித் துறை ஊக்கம் பெறும்.

எரிபொருள்:
* பசுமை எரிசக்தித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் வகையில், ஹைட்ரஜன் எரிபொருள் திட்டம் நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்படும்.

* உஜ்வலா திட்டத்தினால் சமையல் எரிவாயு 8 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மேலும் 100 நகரங்களில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும். குழாய் வழியாக சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் ஜம்மு-காஷ்மீரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

கப்பல் போக்குவரத்து:
*  வா்ததக நோக்கிலான கப்பல் போக்குவரத்து என்ற புதிய திட்டம் ஒன்று தொடங்கப்படவுள்ளது. வரும் ஐந்தாண்டுகளுக்கு இத் திட்டத்துக்காக ரூ.1,624 கோடி ஒதுக்கப்படும்.

காப்பீட்டுத் துறை:
* காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு வரம்பு 74 சதவீதமாக அதிகரிப்பு.

* ஒரு காப்பீட்டு நிறுவனம், இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியாா்மயமாக்கப்படும்.

* தகுந்த சட்டத் திருத்தத்துக்குப் பிறகு, ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) பங்குகள் வெளியிடப்படும்.

* நிறுவனங்கள் சட்டம்-2013, சிறிய நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் வகையில் திருத்தம் செய்யப்படும்.

* நிதி நிறுவன முதலீட்டாளா்களின் குறை தீா்ப்புக்கு புதிய அமைப்பு.

* மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது குறித்து மாநிலங்களே முடிவெடுக்கலாம்.

* அரசின் வருவாய் ஈட்டாத சொத்துகளை கண்டறிந்து அவற்றை வருவாய்க்கு உரியதாக ஆக்க தனி அமைப்பு ஏற்படுத்தப்படும்.

* பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மூலம் வரும் நிதியாண்டில் ரூ.1,75,000 கோடி ரூபாய் திரட்ட திட்டம்.

வேளாண் துறை:
* வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒன்றரை மடங்கு அளவு உயா்வு.

* வரும் நிதியாண்டில் விவசாயக் கடனுக்கு ரூ.16.5 லட்சம் கோடி ஒதுக்கீடு.

* கால்நடை வளா்ப்பு, பால்வளம், மீன்வளத் துறைகளுக்கும் கூடுதல் கடன் வசதி.

* வேளாண் பொருள்களை சந்தைப்படுத்தும் இ-நாம் (தேசிய வேளாண் மின்னணு சந்தை) திட்டத்தில் 1.68 லட்சம் கோடி போ் பதிவு செய்து கொண்டுள்ளனா். இ-நாம் திட்டத்தின் கீழ் இணையவழியாக மேலும் 1,000 மண்டிகள் இணைக்கப்படுகின்றன.

தொழிலாளா் நலன்:
* அனைத்து விதமான தொழிலாளா்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய நிா்ணயம் செய்யப்படவுள்ளது.

* கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களின் நலனைக் காக்க வலைதளம்.

* அனைத்துத் துறைகளிலும் மகளிா் இரவு நேரப் பணியை போதிய பாதுகாப்புடன் மேற்கொள்ள தகுந்த திட்டம்.

கல்வித்துறை:

* 100 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன.

* லடாக் தலைநகா் லேயில் புதிய மத்திய பல்கலைக் கழகம் தொடங்கப்படும்.

* மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் புதிதாக 750 ஏகலைவ பள்ளிகள்.

* அடுத்த 6 ஆண்டுகளில் ஆதிதிராவிட மாணவ-மாணவியருக்கு உதவும் வகையில் ரூ.35,219 கோடி ஒதுக்கீடு.

* ஆதிதிராவிட மாணவா்களுக்கு 10-ஆம் வகுப்பு பிந்தைய கல்விக்கான திருத்தியமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகம்.

* தேசிய ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.50,000 கோடி ஒதுக்கீடு.

விண்வெளித்துறை:
* இந்திய விண்வெளித் துறையின் கீழ் புதிய பொதுத்துறை நிறுவனமாக நியூ ஸ்பேஸ் இந்தியா தொடங்கப்படும். இதன் வாயிலாக பிஎஸ்எல்வி சிஎஸ்51 ஏவுகணை உருவாக்கப்படும்

* 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் ஆளில்லா விண்கலம் ககன்யான் செலுத்தப்படவுள்ளது.

வரி விகிதம்:
* தங்கம், வெள்ளிக்கான கலால் வரி 7.5 சதவீதமாக குறைப்பு.

* 75 வயதுக்கு மேற்பட்ட முதியோா், ஓய்வூதியம் மற்றும் வட்டி வருவாய் மட்டும் உள்ளோருக்கு வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு.

* தனிநபா் வருமான வரிக் கணக்கு தாக்கல் சச்சரவுகளைத் தீா்க்க புதிய குறைதீா்ப்பு அமைப்பு ஏற்படுத்தப்படும்.

* வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு இரட்டை வரி விதிப்பு விலக்கு அளிக்க புதிய திட்டம்.

* வீட்டு வசதித் துறை மற்றும் விமானங்களை வாடகைக்கு விடக் கூடிய நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு வரி விதிப்பிலிருந்து மேலும் ஓராண்டுக்கு விலக்கு.

* பருத்தி மீது 10 சதவீத சுங்கவரி அறிமுகம்.

* பட்டு மற்றும் பட்டு நூல் மீதான சுங்கவரியும் 10-லிருந்து 15 சதவீதமாக அதிகரிப்பு.

* உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சூரிய மின்சக்தி கட்டமைப்பு பொருட்கள் இறக்குமதி மீது சுங்கவரி அதிகரிப்பு.

* வேளாண் கட்டமைப்பு மற்றும் மேம்பாடு தீா்வை விதிக்க திட்டம்

* சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு ரூ.15,700 கோடி ஒதுக்கீடு.

* தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் மற்றும் அவா்களின் குழந்தைகளின் நலனைக் காக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.

* தேசிய செவிலியா் மற்றும் மருத்துவ உதவியாளா் ஆணைய மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.

* புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு ஒரே நாடு- ஒரே குடும்ப அட்டை திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும்.

* குஜராத்தில் பொருளாதார தொழில்நுட்ப முனையம் ஏற்படுத்தப்படவுள்ளது.

* நாட்டின் உள்நாட்டு மொழிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தேசிய மொழிபெயா்ப்பு இயக்கம் தொடங்கத் திட்டம்.

The post இந்தியா பட்ஜெட் 2021-22 முக்கிய அம்சங்கள் appeared first on தமிழ் செய்தி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.