தென் மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.அந்த மையம் வெளியிட்ட அறிவிப்பு:குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.பிற மாவட்டங்களில், இன்று வறண்ட வானிலையே நிலவும். நாளை முதல், 20ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில், வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த, 48 மணி நேரத்துக்கு, வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். காலை நேரங்களில், லேசான பனி மூட்டம் இருக்கும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.