Type Here to Get Search Results !

கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடக்கம்… எடப்பாடியார் தொடங்கி வைத்தார்

சிவகங்கை மாவட்டம், கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் 7 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தொடக்கி வைத்தார்.
கீழடி பள்ளிச் சந்தை திடலில் கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய தொல்பொருள் அகழாய்வுத் துறை அகழாய்வுப் பணிகளை தொடங்கியது.
முதல் மூன்று கட்ட அகழாய்வுப் பணிகளை நிறைவு செய்த மத்திய தொல்லியல் துறை, 4 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொள்ள அனுமதியளித்து. 
அதைத் தொடர்ந்து, கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி 4,5,6-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது.
7 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கியது.
இதில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல் பொருள்கள் அனைத்தும் ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், 7ஆம் கட்ட அகழாய்வுப் பணிக்கு மத்திய தொல்லியல் துறை அண்மையில் அனுமதி வழங்கியது.
கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் 7 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தார்.
இதன்மூலம், கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் நடைபெற உள்ளன. பிப்ரவரி(2021) மாதம் தொடங்கும் அகழாய்வுப் பணிகள் வரும் செப்டம்பர் வரை நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில்,அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.