Type Here to Get Search Results !

சென்னை வந்துகொண்டிருக்கும் சசிகலா காரில் அதிமுக கொடி அகற்றம்

 


சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா விடுதலையாகி தற்போது தமிழகம் வந்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், கடந்த 27 ஆம் தேதி விடுதலையானார். கொரோனா பாதிக்கப்பட்ட அவர், பெங்களுருவில் தங்கி ஓய்வெடுத்து வந்த நிலையில் இன்று மீண்டும் தமிழகம் வந்துள்ளார். தமிழக எல்லை பகுதியில் சாலையின் இருபுறமும் கூடியுள்ள அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். 

இந்நிலையில் ஓசூர் ஜூஜூவாடி அருகில் அதிமுக கொடியுடன் வந்த நிலையில் காரை மாற்றினார் சசிகலா. அவர் பயணித்த வாகனத்தில் இருந்து அதிமுக கொடி அகற்றப்பட்ட நிலையில் தமிழக எல்லையில் காரை மாற்றினார் சசிகலா. அதாவது அதிமுக அடையாள அட்டை வைத்துள்ள நபரின் காரில், கொடியுடன் சசிகலா சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.

முன்னதாக சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்றுஅதிமுக அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனால் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினர் சசிகலா வாகனத்தில் அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்று அறிவுறுத்தினர். இருப்பினும் காவல்துறையின் தடை மீறி அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சசிகலா பயணம் மேற்கொண்டார். இதனால் சசிகலா காரிலிருந்து அதிமுக கொடி அகற்றப்படும் என்று காவல்துறை தெரிவித்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.