Type Here to Get Search Results !

ஏவுகணை சோதனை படத்தை பாகிஸ்தானுக்கு பகிர்ந்து கொண்ட புகைப்படக்காரருக்கு ஆயுள் தண்டனை... ஒடிசாவில் நீதிமன்றம் அதிரடி

 


சண்டிபூரில் ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்தின் முக்கிய புகைப்படங்களை பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ உடன் பகிர்ந்து கொண்டதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) ஒப்பந்த புகைப்படக்காரருக்கு ஒடிசாவில் உள்ள நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

ஈஸ்வர் பெஹெரா (41), ஒடிசாவின் சண்டிப்பூரில் உள்ள இந்திய பாதுகாப்பு மற்று ஆராய்ச்சி நிறுவனத்தின் (டிஆர்டிஓ) ஏவுகணை சோதனை தளத்தில் சிசிடிவி நிலையத்தில் ஒப்பந்த புகைப்படக்காரராக பணிபுரிந்து வந்தார். இவர் ஒவ்வொரு முறையும் ஏவுகணை சோதனை நடைபெறுகையில் புகைப்படம் எடுத்துவிட்டு கேமராவில் ரிப்பேர் செய்ய வேண்டும் எனக் கூறி நேராக கொல்கத்தா செல்வார்.அங்கு ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் ஒராவரை சந்தித்து முக்கிய தகவல்களை அளிப்பார், இதற்காக இவருக்கு பணம் வழங்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பெஹெரா தனது இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐ.எஸ்.ஐ) கையாளுபவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும், அவரை குறைந்தது 10 தடவைகள் அவர் சந்தித்ததாகவும் வழக்கு விசாரணையில் தெரிய வந்துள்ளது. அபுதாபி, மும்பை, மீரட், ஆந்திரா, மற்றும் பீகார் ஆகிய நாடுகளில் இருந்து அவரது வங்கிக் கணக்கில் பணம் மாற்றப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். பெஹெரா கைது செய்யப்படுவதற்கு முன்னர் இவரை நீண்டகாலமாக உள்நாட்டு உளவு அமைப்பான இன்டலிஜன்ஸ் பீரோ கண்காணித்து வந்துள்ளது.  

இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் (ஐபிசி) 121 ஏ (உளவு) மற்றும் 120 பி மற்றும் அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டவிரோதமாக பரிமாறுதல், (ஓஎஸ்ஏ) 3, 4, மற்றும் 5 பிரிவுகளின் கீழ்  நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. நீதிபதி கிரிஜா பிரசாத் மொஹாபத்ரா தனது தீர்ப்பில், குற்றவாளியின் செயலை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டுள்ளார். "பயங்கரவாத குழுக்கள் தற்போதைய இது போன்ற இந்திய மக்களிடமிருந்து பணத்தை கொடுத்த முக்கிய தகவல்களை சேகரிக்கின்றன. இது போன்ற ஒரு குழு தொடர்ந்து எதிரிகளுக்கு தகவல்களை வழங்கி வருகிறது. பெஹெரா போன்றவர்கள், நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்குகின்றனர். பயங்கரவாதிகளின் கைகளில் இது போன்ற இந்தியர்களும் உள்ளனர். 

அவர்கள் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான செயலில் ஈடுபடுகின்றனர். இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் எனவரும் இந்தியாவையும் அதன் குடிமக்களையும் ஆபத்தான சூழ்நிலைகளில் தள்ளிவிடுவார்கள். அவர்கள் கடுமையாக  தண்டிக்கப்பட வேண்டும் என தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.