Type Here to Get Search Results !

மத்திய அரசு கொண்டு வரும் ஜெஇஇ நீட் உள்ளிட்ட தேர்வுக்கு பயிற்சி அளிக்க திறமையானவர்கள் இல்லை..... அமைச்சர் செங்கோட்டையன்

 


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன்;- தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள் கொடுப்பது தான் வழக்கம். ஆனால், தமிழக முதல்வர் தேர்தளுக்கு முன்னரே விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளார். குறைந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் நூலகங்கள் அமைப்பது குறித்து இன்னும் அரசு பரிசீலிக்கவில்லை. பத்துக்கும் குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் சேர்க்கைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு தற்போதைக்கு மட்டுமே தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நீட்தோ்வுக்கு 21 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். எந்த மாநிலத்திலும் நீட் தேர்விற்கு பயிற்சி அளிப்பதில்லை. ஆனால் தமிழகத்தில் இலவச பயிற்சி அளிக்கப்படுகின்றது. இங்கே 5,800 போ் பயிற்சி மேற்கொண்டுவருகின்றனர். மத்திய அரசு கொண்டு வரும் நீட் ஜெஇஇ போன்ற தோ்வுகளுக்கு பயற்சி அளிக்க அரசு பள்ளிகளில் பயிற்சி பெற்றவா்கள் இல்லை. அதனால் தனியாா் மூலம் ஆன்லைன் மூலமாக மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் தேதி வந்தவுடன் பொது தேர்வுகள் பற்றிய அட்டவணை வெளியிடப்படும். 12 ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசனை செய்து அறிவிக்கப்பட்டும் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.