Type Here to Get Search Results !

மகளிர் தினமான இன்று மகளிர் கிரிக்கெட்டின் ஐசிசி போட்டிகள் குறித்த அறிவிப்பு

ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக அணிகள் பங்கேற்கவுள்ளன. மேலும் டி20 சாம்பியன்ஸ் கோப்பை என்கிற புதிய ஐசிசி போட்டியும் 2027 முதல் நடைபெறும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.
2000-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கும் என முடிவெடுக்கப்பட்டது. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகளும் பங்கேற்கும் என 2014-ல் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் 2029 முதல் 10 அணிகளும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 2026 முதல் 12 அணிகளும் பங்கேற்கவுள்ளன.  
ஐசிசி மகளிர் போட்டிகள் – 2023 – 31
கிரிக்கெட் உலகக் கோப்பை
2025: 8 அணிகள், 31 ஆட்டங்கள்
2029: 10 அணிகள், 48 ஆட்டங்கள்
டி20 உலகக் கோப்பை
2024: 10 அணிகள், 23 ஆட்டங்கள்
2026: 12 அணிகள், 33 ஆட்டங்கள்
2028: 12 அணிகள், 33 ஆட்டங்கள்
2030: 12 அணிகள், 33 ஆட்டங்கள்
டி20 சாம்பியன்ஸ் கோப்பை
2027: 6 அணிகள், 16 ஆட்டங்கள்
2031: 6 அணிகள், 16 ஆட்டங்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.