Type Here to Get Search Results !

இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டது… 24 மணி நேரத்தில் 1,691 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,619 பேர் கொரோனாவுக்குப் பலியாகினர். கொரோனா பேரிடர் தொடங்கியது முதலே ஒரு நாள் பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
நாட்டில் நாள்தோறும் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 2.73 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 1,50,61,919 ஆக அதிகரித்துள்ளது. 
இதுவரை 1,44,178 பேர் குணமடைந்த நிலையில் தற்போது 19.29 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
மேலும் கொரோனா பாதித்த 1,619 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,78,769 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 12,38,52,566 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 
கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த போராடி வரும் மகாராஷ்டிரம், கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் 6 மாநிலங்களிலிருந்து வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மகாராஷ்டிர தலைமைச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், கேரளம், கோவா, குஜராத், தில்லி மற்றும் என்சிஆர், ராஜஸ்தான், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் கொரோனா தொற்று அபாயம் அதிகமுள்ள மாநிலங்களாக கண்டறியப்பட்டுள்ளன.
எனவே, இந்த மாநிலங்களிலிருந்து மகாராஷ்டிரம் வரும் பயணிகள் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் கொரோனா இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநிலங்களில், உருமாறிய அதிதீவிர கொரோனா பரவல் அதிகமிருப்பதால், அந்த தொற்று மகாராஷ்டிர மாநிலத்துக்குள் பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த உத்தரவு வரும் வரை இந்தக் கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.