Type Here to Get Search Results !

உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 807,082 பேருக்கு பாதிப்பு…!

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவிற்கு 807,082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,35,18,277 பேராக அதிகரித்துள்ளது.
கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 12,21,26,742 குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் 1,83,35,127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 109,407 பேர் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு ஒரே நாளில் 13,388 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு மரணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 30,56,408 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 57,782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,25,33,935 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவிற்கு 860 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு பலியானோர் மொத்த எண்ணிக்கை 582,433 பேராக அதிகரித்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலை பரவல் அதி தீவிரம் – இந்தியாவில் 3 லட்சம் பேர் பாதிப்பு – 2020 பேர் மரணம்
பிரேசில் நாட்டில் கொரோனாவிற்கு 73,172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,40,50,885 பேராக அதிகரித்துள்ளது. அங்கு ஒரே நாளில் கொரோனாவிற்கு 3,481 பேர் மரணமடைந்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் கொரோனாவிற்கு 43,098 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53,39,920 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு மொத்தம் 375 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 101,597 பேர் உயர்ந்துள்ளது.
ரஷ்யா, பிரிட்டனில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும் துருக்கி நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அங்கு ஒரே நாளில் 61,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரேனாவிற்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 43,84,624 பேராக உயர்ந்துள்ளது. 346 பேர் உயிரிழந்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.