Type Here to Get Search Results !

மக்களே உஷார்….! அடுத்த 2 தினங்களுக்கு மிக பலத்த மழை.. வானிலை மையம் தகவல்…..!

விதர்பா முதல் உள் தமிழகம் வரை (1.5 கிலோமீட்டர் உயரம்வரை ) நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக
20.04.2021, 21.04.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு,  மதுரை, திருச்சிராப்பள்ளி, விருதுநகர், திருநெல்வேலி, மற்றும் கன்னியகுமாரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சூறைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 22.04.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 23.04.2021, 24.04.2021 :  மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு  வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
வெப்பநிலை முன்னறிவிப்பு :
20.04.2021 முதல் 21.04.2021 வரை:  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளகுறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் கரூர் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகக்கூடும். தமிழகம், புதுவையில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity) 50 முதல் 80 விழுக்காடு வரை இருக்கக்கூடுமென்பதால்  பிற்பகல் முதல் காலை வரை  வெக்கையாகவும்,  இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும். தேவைக்கேற்ப குடிநீர், இளநீர், மோர் மற்றும் நீர்சத்து மிகுந்த காய்கறிகள், பழவகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளவும், வெள்ளை மற்றும் வெளிறிய வண்ண (light colour) கதர் ஆடைகளை அணிவது சிறந்தது. 
கடந்த 24 மணி நேரத்தில்  மழை அளவு (சென்டிமீட்டரில்): பேச்சிப்பாறை  (கன்னியாகுமரி), பெருஞ்சாணி  அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை  (கன்னியாகுமரி)  தலா  7,  நாமக்கல்,   ஈரோடு  தலா  5, எடப்பாடி  (சேலம்), பல்லடம்  (திருப்பூர்), கெட்டி  (நீலகிரி), கோத்தகிரி  (நீலகிரி) தலா 4, கயத்தாறு (தூத்துக்குடி)  3, ஓகேனக்கல்  (தர்மபுரி) 2. மீனவர்களுக்கான எச்சரிக்கை : தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு  40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தபடுகிறார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.