Type Here to Get Search Results !

கொரோனாவால் இன்று உயிரிழந்தவர்களில் 66 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர்….

 

தமிழகத்தில் இன்று 13,776 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 3842 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 8,078 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 10,51,487. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 3,01,541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9,43,044.

இன்று வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 44 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 40,25,783.

சென்னையில் 3842 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 9,932 பேருக்குத் தொற்று உள்ளது.

* தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 194 தனியார் ஆய்வகங்கள் என 263 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 95,048.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,17,54,456.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,25,593.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 10,51,487.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 13,776.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 3,842.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 6,34,824 பேர். பெண்கள் 4,16,625 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர்.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 8,432 பேர். பெண்கள் 5,344 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,078 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 9,43,044 பேர்.

* இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 78 பேர் உயிரிழந்தனர். 44 பேர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவராவர், 34 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இதில் 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 5 பேர் ஆவர். சென்னையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37 பேர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 13,395 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 4512 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில் 66 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் 12 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.