Type Here to Get Search Results !

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும்…. எடப்பாடியாரிடம் குஷ்பு வேண்டுகோள்…

 

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியை பாஜக வேட்பாளர் குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் இல்லாமல் பல மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் மருத்துவ ஆக்சிஜனை நிறுவனங்கள் உற்பத்தி செய்து வருகின்றன்.

இந்நிலையில் தூத்துக்குடியில் மூடப்பட்டு கிடக்கும் ஸ்ரெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து வழங்க அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரணையின் போது ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கலாம் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இருப்பினும் ஸ்ரெர்லைட் ஆலையை திறந்தால் மீண்டும் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என பாஜகவின் ஆயிரம் விளக்கு வேட்பாளரான குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில பதிவிட்டிருக்கும் அவர், நமக்கு ஆக்ஸிஜன் தேவை உள்ளது. உயிர்களை காப்பாற்றுவதற்காக ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்றால் அது நடக்கட்டுமே.

இந்த பெருந்தொற்று காலத்தில் உயிர்களை காப்பதே நம் முக்கிய நோக்கமாகும். ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என முதல்வர் பழனிசாமியை நான் கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.