Type Here to Get Search Results !

மத்திய அரசு, பிரதமர் மோடிக்கு எதிரான டூல்கிட் விவகாரத்தில் 2 காங்கிரஸ் தலைவர்களுக்கு டெல்லி போலீஸார் நோட்டீஸ்

கொரோனா வைரஸ் மற்றும் புதிய நாடாளுமன்ற வளாகம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் புகழை கெடுக்க காங்கிரஸ் சார்பில் ட்விட்டர் டூல்கிட்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக பாஜக மூத்த தலைவர் சம்பித் பத்ரா அண்மையில் குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் பாஜகவும் காங்கிரஸும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த பின்னணியில் டூல்கிட் விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் சிலர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளுக்கு ‘சந்தேகத்துக்குரியது’ என்றுட்விட்டர் நிர்வாகம் வகைப்படுத்தியது. இந்த விவகாரம் விசாரணையில் இருக்கும்போதே ‘சந்தேகத்துக்குரியது’ என்று வகைப்படுத்தியது ஏன் என்று ட்விட்டர் நிறுவனத்துக்கு டெல்லி போலீஸார் நோட்டீஸ் அனுப்பினர்.
இதுதொடர்பாக டெல்லி, குருகிராமில் உள்ள ட்விட்டர் அலுவலகங்களில் டெல்லி போலீஸார்அண்மையில் முதல்கட்ட விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் காங்கிரஸ் சமூகவலைதள பிரிவு தலைவர் ரோகன் குப்தா, செய்தித் தொடர்பாளர் ராஜீவ் கவுடா ஆகியோருக்கு டெல்லி போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து டெல்லி போலீஸார்கூறும்போது, “டூல்கிட் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தரப்பில்ஏற்கெனவே புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்த இருவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இந்த விவகாரத்தில் பாஜக மூத்ததலைவர் சம்பித் பத்ராவுக்கும் விரைவில் நோட்டீஸ் அனுப்புவோம்” என்றனர்.
புகார் மனு வாபஸ்?
இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறும்போது, “டூல்கிட் விவகாரம் தொடர்பாக மே 18-ம் தேதி டெல்லி போலீஸில் புகார் அளித்தோம். எங்கள் புகார் தொடர்பாக டெல்லி போலீஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசின்கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீஸார் எங்களுக்கு எதிராககாய் நகர்த்துகின்றனர். எனவே புகாரை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தன

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.