Type Here to Get Search Results !

இந்தியாவில் தொடா்ந்து 3 நாளாக, 2 லட்சத்திற்கும் குறைவான அளவில் கொரோனா பதிப்பு

இந்தியாவில் தொடா்ந்து 3 நாளாக, 2 லட்சத்திற்கும் குறைவான அளவில் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தற்போது 21,14,508 -ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டில் தொடா்ந்து தொடா்ந்து 3 நாளாக கொரோனா தொற்று 2 லட்சத்திற்கும் குறைவான அளவில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,65,553 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
17-வது நாளாக, தினசரி புதிய பாதிப்புகளைவிட, குணமடைபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 2,76,309 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 
நம் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 2,54,54,320-ஆக இன்று பதிவாகியுள்ளது. இதுவரை தொற்று பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,25,972 ஆக உள்ளது.   
ஞாயிற்றுக்கிழமை காலை அளவிலான 24 மணி நேரத்தில் 20,63,839 பரிசோதனைகளும், இதுவரை மொத்தம் 34,31,83,748 கோடி பரிசோதனைகளும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தில் மேலும் ஒரு புதிய மைல்கல் சாதனையாக, இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 21,20,66,614 பேருக்கு போடப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.