Type Here to Get Search Results !

தர்மபுரி மினி கிளினிக் மருத்துவர் நேர்காணலில் முறைகோடு – மருத்துவர்கள் குமுறல்….!

தர்மபுரி மாவட்டத்தில் மினி கிளினிக் மருத்துவர்கள் தேர்வு செய்யும் நேர்காணலில் மிகுந்த குளறுபடி ஏற்பட்டதால் மருத்துவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
கடந்த அ.தி.மு.க ஆட்சிகாலத்தில் மக்களுக்கு அருகிலேயே மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் துவங்கப்பட்டது அம்மா மினி கிளினிக். தற்பொழுது தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் குளறுபடிகள் துவங்கிவிட்டன.
இதில் தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 45 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டன, இந்த நிலையில் அம்மா மினி கிளினிக்கில் பணியாற்ற அரசு கலைக்கல்லூரி மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவர்களுக்கு நேர்காணல் நடைபெற்றது.
நேர்காணலில் பங்கேற்பதற்காக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். 120 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 45 பணியிடங்களுக்கு நேர்காணல் நடைபெற்றது.
நேர்காணல் முடிவில் 30 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 15 பணியிடங்களுக்கு தவறாக காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன என்று திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இது உண்மையில் 30 பணியிடங்கள் மட்டுமா அல்லது ஏற்கனவே 15 பணியாளர்களை சிபாரிசில் எடுத்துவிட்டு மீதமுள்ள காலி பணியிடங்களுக்கு நடந்த கண்துடைப்பு நேர்காணலா என மருத்துவர்கள் சந்தேக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.