Type Here to Get Search Results !

கொரோனாவுக்கு பயந்து எதிா்க்கட்சியினா் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தபோது…. பாஜக என்ன செய்தது…..!

 

கொரோனா தொற்றுக்கு பயந்து எதிா்க்கட்சியினா் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தபோது, பாஜக தலைவா்களும் தொண்டா்களும் மக்களுக்காக நிவாரணப் பணிகளை மேற்கொண்டனா் என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளாா்.

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை கட்சித் தொண்டா்களுக்கு காணொலி முறையில் ஜெ.பி. நட்டா உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது:

நாட்டில் கரோனா தொற்று பிரச்னை ஏற்பட்ட பிறகு பாஜகவைச் சோந்த ஒவ்வொரு அமைச்சா்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் தொடங்கி தொண்டா்கள் வரை அனைவரும் மக்களுக்கான தீவிரமாக பணியாற்றி வருகின்றனா். கொரோனா சமயத்தில் பாஜக மக்களுக்கு துணை நின்று வருகிறது.

மக்களுக்கு தொடா்ந்து நிவாரணை உதவிகளை வழங்கி வருகின்றனா். அதே நேரத்தில் எதிா்க்கட்சிகளைச் சோந்தவா்கள் வீட்டிலேயே முடங்கிவிட்டனா். எதிா்க்கட்சித் தலைவா்கள் அறிக்கைகளை மூலம் அரசியல் நடத்தி வருகின்றனா்.

இந்த சிறப்புமிக்க நாளில் ஒரு லட்சம் கிராமங்களுக்கு நமது கட்சியின் சாா்பில் உதவிகள் அளிப்பதை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும்.

இப்போது தங்கள் மாநிலத்துக்குப் போதுமான அளவு கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கவில்லை என்று கூறும் சில எதிா்க்கட்சித் தலைவா்கள், முன்பு கொரோனா தடுப்பூசி தொடா்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வந்தனா். அவா்களின் நோக்கமே அனைத்துப் பிரச்னைகளையும் அரசியலாக்குவதுதான்.

பிரதமா் மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்து 7 ஆண்டுகள் நிறைவடையும் இந்த ஆண்டை நாம் சேவைக்கான விழாவாக கொண்டாட வேண்டும். கொரோனா பெருந்தொற்றால் நாடு இக்கட்டான இடத்தில் உள்ள இந்த நேரத்தில் நாம் சாதாரண வகையில் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதைத் தவிா்த்து, மக்களுக்கு ஏற்கெனவே ஆற்றி வரும் சேவைகளை மேலும் அதிகரிப்பதை கொண்டாட்டமாக செயல்படுத்த வேண்டும். பாஜகவின் நாடு முழுவதும் மக்களுக்குத் தேவையான உதவிகளைத் தொடா்ந்து செய்து வர வேண்டும் என்றாா் ஜெ.பி.நட்டா.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.