Type Here to Get Search Results !

LIC யும் PSBB யும் சேர்ந்து இந்த கூட்டு களவாணித்தனம்…. பரபரப்பு புகார்

 
பத்மா ஷேசாத்ரி பள்ளி மீது கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வெளியாகிக் கொண்டுள்ளன.

சமீபத்தில் பத்மா சேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்புகளின் போது ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் ஆபாசமாக நடந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் அந்த பள்ளியின் மீது பழைய மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் என இப்போது அடுக்கடுக்காக புகார்களைக் கூறி வருகின்றனர். இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பள்ளி நிர்வாகமும் எல் ஐ சி நிறுவனமும் சேர்ந்து முறைகேடாக எல் ஐ சி நிறுவனத்துக்கு ஆட்களை வேலைக்கு எடுத்ததாகவும் அதில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக பார்த்தி ரவிச்சந்திரன் என்பவரின் முகநூல் பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்தபதிவில் ‘SBB யும் LIC யும்!

பத்மா சேசாத்திரி பாலபவன் 1990 களின் தொடக்கத்தில் LIC யுடன் ஒரு டீல் போட்டது. அதன்படி, PSBB +1, +2 வில் Life Insurance என்று ஒரு சிறப்புப்பாடப்பிரிவைத் தொடங்கும். அதில் பாஸ் ஆகிற குழந்தைகள் மனு கொடுத்தால் அவர்கள் LIC யில் நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள். வேலைவாய்ப்புக்காக பதிவோ நேர்முக தேர்வோ எழுத்துத்தேர்வோ சீனியாரிட்டியோ எதுவும் கிடையாது. இடஒதுக்கீடும் கிடையாது.
மண்டல் கமிஷன் அறிக்கையைத்தொடர்ந்து நாடு பற்றி எரிந்து கொண்டிருந்த பின்னணியில் தான் LIC யும் PSBB யும் சேர்ந்து இந்த கூட்டு களவாணித்தனம் செய்தன. மெட்ராஸ் ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு அது தவறு என தீர்ப்பு வரும் வரை துணிச்சலாக நியமனங்கள் நடந்தன.

மக்களின் சொத்து; நாட்டின் கோவில் என்றெல்லாம் நாம் மேடைகளில் முழங்கும் இந்த LIC நிர்வாகம் உள்ளடி வேலை செய்து PSBBயுடன் கள்ளத்தொடர்பு வைத்து இட ஒதுக்கீட்டு முறையை கேலி செய்தது. இப்படியாகத்தானே PSBB மிகச்சிறந்த பள்ளியென பேர் வாங்கியது!’ எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.