Type Here to Get Search Results !

11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு அறிவிப்பு…. Notice to other districts except 11 districts in Tamilnadu ….

தமிழகத்தில், ஜூன்-7ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெறும் நிலையில், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவர் குழு பரிந்துரை செய்தது.

இந்நிலையில், தற்போது இது ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான செய்திகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஜூன்-14ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆனால், தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள 11 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு, சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

  • தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு. ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிருவாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும். • இறைச்சிக் கூடங்கள் (Slaughter houses) விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும். மொத்த
  • தீப்பெட்டி தொழிற்சாலைகள் பணியாளர்களுடன் நிலையான 50 சதவிகிதம் வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
  • அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு. பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
  • தனியார் பாதுகாப்பு அலுவலகம், சேவை நிறுவனங்கள் மற்றும் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் (Housekeeping) இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.
  • மின் பணியாளர் (Electricians) பிளம்பர்கள் (Plumbers) கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
  • மின் பொருட்கள் (electrical goods), பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் (விற்பனை நிலையங்கள் அல்ல) காலை 6.00 மணி முதல் மாலை செயல்பட அனுமதிக்கப்படும். 5.00 மணி வரை
  • ஹார்டுவேர் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்டும்.
  • கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். வாகன விநியோகப்பாளர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மட்டும் (விற்பனை நிலையங்கள் அல்ல) காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • வாடகை வாகனங்கள், ஆட்டோக்களில் அனுமதிக்கப்படும். பயணிகள் டேக்ஸிகள் இ-பதிவுடன் செல்ல மேலும், வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.