Type Here to Get Search Results !

ஊரடங்கு உத்தரவு எத்தனை மணி நேரம் செயல்படும்…? என்ன தளர்வுகள் …! How many hours does the curfew order work? What relaxations …!

 
தமிழகத்தில் 7ம் தேதி காலை 6 மணியுடன் முடியவிருந்த நிலையில் 14ம் தேதி வரை மேலும் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 7 முதல் 14 வரையிலான ஊரடங்கு காலத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 7ம் தேதி முதல் 14ம் தேதி வரையிலான ஊரடங்கு காலத்தில் இறைச்சிக் கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். வாடகைகார்களில் 3 பயணிகள், ஆட்டோக்களில் 2 பயணிகள் மட்டுமே செயல்பட அனுமதி. மீன்சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டுமே அனுமதிக்கப்படும் இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்காக மட்டுமே அனுமதிக்கப்படும்.

அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். சார் பதிவாளர் அலுவலகங்களில் நாளொன்றுக்கு 50 டோக்கள் மட்டுமே வழங்கப்பட்டு பத்திரப்பதிவு. தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.