Type Here to Get Search Results !

ஐ.நா பொதுச் சபையின் 76 வது தலைவராக மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் தேர்வு இந்தியா வாழ்த்து…! Congratulations to India election of Maldivian Minister Abdullah Shahid as the 76th President of the UN General Assembly …!

ஐநா பொதுச்சபையின் 76வது தலைவராக மாலத்தீவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் சுழற்சி அடிப்படையில் ஐநாவின் பொதுக்குழு தலைவர் தேர்வு செய்யப்படுவார். பிராந்திய அடிப்படையில் சுழற்சி முறையில் இந்த வாய்ப்பு வழங்கப்படும். இந்த நிலஉயில் 2021-22க்கான வாய்ப்பு ஆசிய -பசிபிக் குழுவிற்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து கடந்த வருடம் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக மாலத்தீவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் அறிவித்தார். இவரை எதிர்த்து அப்போது யாரும் போட்டியிட முன்வராத நிலையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இவருக்கு ஆதரவு அளித்தது.
அதே சமயம் மாலத்தீவு இந்த பதவியை இதுவரை வகித்தது இல்லை. இதனால் பல்வேறு நாடுகள் நல்லெண்ண அடிப்படையில் மாலத்தீவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித்திற்கு ஆதரவு அளித்தது. இந்தியாவும் கடடந்த நவம்பரில் அப்துல்லா ஷாஹித்திற்கு ஆதரவு அளிப்பதாக அதிகார்பூர்வமாக தெரிவித்தது .
இந்த நிலையில் திடீரென ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் சலமாய் ராசூல் இதே பதவிக்கு போட்டியிடுவதாக 6 மாதங்கள் முன் அறிவித்தார். ஆபகானிஸ்தானுக்கு பல நாடுகள் ஆதரவு தந்தாலும், திடீரென கடைசி கட்டத்தில் வந்ததால், முன்கூட்டியே பலர் மாலத்தீவிற்கு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்து இருந்தனர்.
அதோடு ஆப்கானிஸ்தான் ஏற்கனவே 1966-67ல் இந்த பதவியில் இருந்துள்ளது. மாலத்தீவு இந்த பதவியை வகித்தது இல்லை. மாலத்தீவு ஏற்கனவே பலரிடம் பேசி ஆதரவை பெற்று இருந்தது. இந்த நிலையில் இன்று நடந்த வாக்கெடுப்பில் மாலத்தீவு வெற்றிபெற்றது.
இதையடுத்து ஐநா பொதுச்சபையின் 76வது தலைவராக மாலத்தீவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக 143 வாக்குகள் விழுந்தன. 48 வாக்குகள் எதிராக சென்றன. எந்த நாடும் வாக்கெடுப்பை புறக்கணிக்கவில்லை. ஐநா பொதுச்சபையின் தலைவரான துருக்கியை சேர்ந்த வோல்கான் போஸ்கீரை இவர் மாற்றம் செய்வார்.
ஐநா பொதுச்சபையின் 76வது தலைவராக தேர்வாகி உள்ள அப்துல்லா ஷாஹித் இந்திய வெளியுறவுத்துறை சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.