Type Here to Get Search Results !

மன்மோகன் ஆட்சியில் அதாவது கருணாநிதி பங்கெடுத்த ஆட்சியில் சிறப்பு பொருளாதாரம் எப்படி இருந்தது….?

 
மன்மோகன் ஆட்சியில் அதாவது கருணாநிதி பங்கெடுத்த ஆட்சியில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என பல இடங்கள் உருவாக்கபட்டன, பன்னாட்டு நிறுவணங்களுக்கு அவ்விடத்தில் பல சலுகைகள் வழங்கபட்டன‌
இதை இன்னும் ஆழமாக சொல்லவேண்டும் என்றால் இந்த மொகலாய ஆட்சியில் இந்தியா எங்கும் வெள்ளையன் வியாபாரம் செய்ய தனி இடம் கொடுத்தார்கள் அல்லவா? அதில் ராணுவம் உள்ளிட்ட எல்லாமும் வைத்து கொண்டு ஆள வழி செய்தார்கள் அல்லவா? அதே திட்டம்
ஆம், பொருளாதார மண்டலங்கள் என்பது வல்லரசுகளுக்கு ஒரு நாடு தன் நாட்டில் மறைமுகமாக இடமளிப்பது
இந்தியா காங்கிரஸ் ஆட்சியில் இப்படித்தான் சிக்கியது, தாராளமயமாக்கபட்ட சட்டத்திட்டங்கள் அதற்கு உதவின‌
ஒரு பொருளாதார மண்டலமும் உருப்பட்டதாக தெரியவில்லை, பல்லாயிரம் மக்களுக்கு வேலைவாய்ப்பு என காங்கிரஸ் திமுக அரசால் சொல்லபட்ட எந்த மண்டலமும் உருப்படவில்லை ஆனால் மர்ம நடவடிக்கைகள் இருந்தன‌
மோடி வந்தபின் இவற்றில் கைவைத்தார், இந்திய திருநாட்டுக்குள் இந்த சிறப்பு மண்டலம் என ரகசிய இடங்களெல்லாம் வேண்டாம் என அவற்றை திரும்ப பெற்றார்
“மேக் இன் இந்தியா” என மோடி திட்டங்களை அறிவித்து, எந்த நாடும் இந்தியாவில் தொழில் செய்யலாம் என வெளிபடையாக அறிவித்தபின் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அவசியம் இல்லாமல் போயிற்று
இப்பொழுது உலகெல்லாம் உற்று பார்த்தால் இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் என்பதை பின்பற்றிய நாடுகளின் நிலை என்னாயிற்று என்பதுதான் பரிதாபம்
மூன்றாம் உலக நாடுகளிலெல்லாம் சிறப்பு மண்டலம் என கால்வைத்த வல்லரசுகள் அங்கே ஆட்டம் போட்டு அழிச்சாட்டியம் செய்கின்றன‌
ஆப்ரிக்காவின் பெரும் பகுதி நாடுகளின் பல இடங்கள் இப்படி ராணுவ ஆக்கிரமிப்புடன் வெளிபார்வைக்கு கப்பல், துறைமுகம், தொழிற்சாலை என வெற்று போர்டு மாட்டி வைத்திருக்கின்றன‌
ஆப்ரிக்காவிலும் அரேபியாவிலும் அமெரிக்கா இதை செய்கின்றது
வடகொரியா முதல் பாகிஸ்தான், ஈரான், இலங்கை என இப்படி புகுந்து அந்நாடுகளை தன் இரும்பு கரத்தால் வளைத்து வைத்திருக்கின்றது சீனா
2014க்கு பின் காங்கிரஸ் திமுக அரசு தொடர்ந்திருந்தால் இந்நேரம் இந்தியாவிலும் இப்படி வல்லரசுகள் கையில் பல இடங்கள் சிக்கியிருக்கும்
ஏன் சீனா கூட கப்பல் துறைமுகம் என நுழைந்திருக்கலாம், அமெரிக்கா விமான நிலையம் , கணிபொறி உற்பத்தி என பல முகங்களில் நுழைந்திருக்கலாம்
அப்படி பட்டா போட்டு கொடுக்கும் வேலையினைத்தான் மன்மோகன் சிங்கும் திமுகவும் “சிறப்பு பொருளாதார மண்டலம்” என எழுதி கொடுத்திருந்தன‌
இந்தியாவில் யார் செய்த தவமோ மோடி வலுவாக வந்து அவற்றை எல்லாம் மாற்றி இப்பொழுது தேசத்தை வலுவாக்கி வைத்திருக்கின்றார்
இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் இந்த பொருளாதார மண்டலத்துக்கு இடம் கொடுத்துவிட்டு இப்பொழுது கதறி அழும் நிலையில் பாரத பெருமகன் மோடியினை கையெடுத்து வணங்க தோன்றுகின்றது
அந்த பெருமகன் நாட்டை காக்க வந்த தவமுனி

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.