Type Here to Get Search Results !

ராஜஸ்தானில் மின்னல் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்… Prime Minister Modi pays condolences to the families of the victims of the lightning strike in Rajasthan…

ராஜஸ்தானில் மின்னல் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அந்த நேரத்தில், ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கி 7 குழந்தைகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்; 6 குழந்தைகள் உட்பட 21 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், ராஜஸ்தானில் மின்னல் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ .5 லட்சம் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இந்த சூழ்நிலையில், ராஜஸ்தானில் மின்னல் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
“ராஜஸ்தானின் சில பகுதிகளில் மின்னல் காரணமாக பலர் உயிர் இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.