Type Here to Get Search Results !

ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற இந்திய விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி உரை… Prime Minister Modi’s speech with Indian athletes who have qualified for the Olympics …

பிரதமர் நரேந்திர மோடி ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற இந்திய விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த வீடியோ விவாதத்தில்,
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், மத்திய அமைச்சர் நிஷித் பிராமணிக், சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
பிரதமருடன் கலந்துரையாடலில் வலரிவன் மற்றும் சரத்கமல் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு சிறிய விளையாட்டு வீரராகத் தொடங்கி ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்று சர்வதேச போட்டிகளுக்குச் செல்வது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
குத்துச்சண்டை வீரர் மேரி கோம், பூப்பந்து வீரர் பி.வி.சிந்து, தீபிகா குமாரி மற்றும் பலர் கலந்து கொண்டு பிரதமருடன் கலந்துரையாடினர்.
18 ஆட்டங்களில் பங்கேற்க இந்தியாவில் இருந்து மொத்தம் 126 வீரர்கள் டோக்கியோவுக்குச் செல்வார்கள். ஒலிம்பிக்கிற்குச் செல்லும் மிகப்பெரிய இந்திய அணி இதுவாகும்.
டோக்கியோ ஒலிம்பிக் 2020 க்கு செல்லும் இந்திய தடகள அணியின் வசதிகளுக்கான ஏற்பாடுகளை பிரதமர் சமீபத்தில் ஆய்வு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.