Type Here to Get Search Results !

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைக்கும், சிறந்த மாடு பிடி வீரருக்கும் தலா ஒரு காரை பரிசு

உலகப்புகழ் வாய்ந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.16) தொடங்கி உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விளையாட 655 வீரர்களும், 800 காளைகளும் பதிவு செய்யப்பட்டு போட்டி நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்குத் துவங்கி மாலை 4 மணியளவில் போட்டி நிறைவடைகிறது. 
அதிக காளைப் பிடிக்கும் சிறந்த வீரருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு காரும், களத்தில் சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு காரும் பரிசாக வழங்க உள்ளனர். மேலும் காளைகளைப் பிடிக்கும் வீரர்களுக்கும், பிடிபடாமல் பாய்ந்தோடும் காளையின் உரிமையாளருக்கும் தங்கக் காசு, எல்இடி டிவி, பிரிட்ஜ், பைக், மிக்சி, சைக்கிள், கட்டில், மெத்தை போன்ற எண்ணற்ற பரிசுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன. முதல்வர் மற்றும் துணை முதல்வர் வருகையையொட்டி நேற்றிரவு முதலே அலங்காநல்லூர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 
வீரர்களைப் பரிசோதனை செய்வதற்காகவும், காயங்கள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடி சிகிச்சை வழங்கவும் 150 பேர் கொண்ட மருத்துவக் குழுவினரும், 108 ஆம்புலன்ஸ்கள் 10 எண்ணிக்கையிலும் தயார் நிலையில் உள்ளன. மேலும் மாடுகளுக்கு காயம் ஏறபட்டால் சிகிச்சை மேற்கொள்ள கால்நடை மருத்துவர் குழுவும், 2 கால்நடை ஆம்புலன்ஸ்களும் உள்ளன. மேலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ரசிப்பதற்காக அலங்காநல்லூரின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே பெரிய திரைகள் கொண்ட எல்இடி டிவிக்கள் வைக்கப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.