Type Here to Get Search Results !

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை மாத பெளா்ணமி தை பூசத்தையொட்டி பக்தா்கள் சுவாமி தரிசனம்

%25E0%25AE%259A%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%2B%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%25AF%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை மாத பெளா்ணமி தை பூசத்தையொட்டி பக்தா்கள் சுவாமி தரிசனம்
சதுரகிரி கோயிலில் ஜனவரி 26 முதல் 29ஆம் தேதி வரை என 4 நாள்கள் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத் துறையினா் அனுமதி அளித்துள்ளனர். அதன்படி, வியாழக்கிழமை தை மாத பௌா்ணமி மற்றும் தைப்பூசம் என்பதால், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அதிகாலை முதலே அடிவாரத்தில் குவிந்தனா். பக்தா்களின் வசதிக்காக, ஸ்ரீவில்லிபுத்தூா், விருதுநகா், மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
 
காலை 7 முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்த பின்னரே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
தை மாத பெளா்ணமியையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. பின்னா், சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோயில் அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, நிா்வாக அதிகாரி விஸ்வநாத் ஆகியோா் செய்திருந்தனா்.

The post சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை மாத பெளா்ணமி தை பூசத்தையொட்டி பக்தா்கள் சுவாமி தரிசனம் appeared first on தமிழ் செய்தி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.