மேற்கு வங்கம் நந்திகிராம் தொகுதியில் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் தலைவருமான மம்தா பானர்ஜி போட்டியிட்டார்.
இன்று வாக்கெண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் 11.30 மணி நிலவரப்படி அதே தொகுதியில் போட்டியிட்ட பாஜகவை சேர்ந்த சுவேந்து அதிகாரியிடம் பின்னடைவை சந்தித்துள்ளார்.
திரிணமூலில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் சுவேந்து அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
11.30 மணி நிலவரப்படி, திரிணமூல் 191, பாஜக 97, மார்சிஸ்ட் 1, பிற கட்சிகள் 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர்.