Type Here to Get Search Results !

எடப்பாடியார் ஆட்சியில் 4 ஆண்டுகளில் 400 ஆண்டுகால சாதனைகள்... ஆர்.பி. உதயகுமார்...!

 


பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு இலவசமாக கல்வி கற்பிக்கும் 1,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஜெயலலிதா பேரவை, அம்மா சேரிட்டபிள் டிரஸ்ட் ஆகியவை சார்பில் கணினி வழங்கும் நிகழ்ச்சி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா கோயிலில் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் வழங்கும் விழா நடைபெர்றது. இந்த விழாவில் பங்கேற்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார். 

 “தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 400 ஆண்டு கால சாதனைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார். இவற்றையெல்லாம் மறைக்கும் வகையில் எதிர்க்கட்சியினர் பொய் பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்து, மக்களின் விதியை மாற்றிக் காட்டினார். அதுபோலத்தான் இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி சாதித்து வருகிறார். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ. 12,110 கோடி பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இதன் மூலம் தமிழகத்தில் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளின் குடும்பத்தில் ஒளிவிளக்கை ஏற்றி உள்ளார். தேர்தல் அறிக்கையில்கூட வாக்குறுதிகள் அறிவிப்பதில் காலதாமதம் ஆகும். ஆனால், விவசாயிகள் கோரிக்கை வைக்காமலேயே இதை நிறைவேற்றித் கொடுத்திருக்கிறார் முதல்வர். இதன் மூலம் விவசாயிகளின் காவலனாக முதல்வர் உள்ளார்” என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.