Type Here to Get Search Results !

ஈரோட்டில் ரூ.5.76 கோடி மதிப்பிலான பணிகளுக்கு இன்று பூமி பூஜை

 


ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மண்டலம் ஒன்றுக்கு உட்பட்ட பகுதியான உதுமான்சா வீதி, ஈதுக்கா வீதி, காயிதே மில்லத் வீதி, நஞ்சப்பா நகர், ஆயில் மில் ரோடு, சேரன் வீதி, கரிகாலன் வீதி, அஜந்தா நகர், ஈரோடு இரண்டாம் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியான பாலசுப்பிரமணியம் நகர், கிரி பட்டறை மெயின் ரோடு, சகன் வீதி, வரகப்பாவீதி, ஈரோடு நான்காம்  மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியான மரப்பாலம் மெயின் ரோடு, மரப்பாலம் ரோடு ஐந்தாவது விதி, ஆறாவது விதி, ரங்க பவனம் மெயின் மற்றும் குறுக்கு சாலைகள், கே.ஏ.எஸ் நகர் மெயின் மற்றும் குறுக்கு சாலைகள், அரசிலங்கோ வீதி, நியூ காவேரி ரோடு போன்ற பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் புனரமைக்கப்பட்டு அந்தப் பகுதிகளில் புதிய தார்சாலைகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதனை ஏற்று இந்தப் பகுதிகளில் ரூ.5 கோடியே 76 லட்சத்து 16 ஆயிரம்  மதிப்பில் புதிய தார் சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடந்தது. 

நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே. எஸ். தென்னரசு ஆகியோர் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து தார் சாலை அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தனர். மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், துணை ஆணையாளர் சண்முகவடிவு, பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், ராமசாமி, முருக சேகர், ஜெயராஜ், கோவிந்தராஜன், மாணவரணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி, குப்புசாமி, பாலச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.