Type Here to Get Search Results !

சசிகலா வருகை.... கிருஷ்ணகிரி காவல்துறை அளித்திருக்கும் முக்கிய உத்தரவு.... பரபரப்பு தகவல்...!

 


பெங்களூருவிலிருந்து இன்று காலை புறப்பட்டு,  கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக இன்று மாலை சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகலா பயணிக்கும் வழி நெடுகிலும் சிறப்பான வரவேற்பை அளிக்க அமமுகவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த நிலையில், தமிழகம் - கிருஷ்ணகிரி எல்லையில், சசிகலாவை வரவேற்க, அமமுக அனுமதி கோரியிருந்தது. இதற்கு கிருஷ்ணகிரி காவல் துணை கண்காணிப்பாளர் அளித்திருக்கும் செயல்முறை நடவடிக்கை அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கரோனா தொற்றுப் பரவல் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட செயல்முறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.

1. சசிகலா வாகனத்தின் பின்பு ஐந்து வாகனங்கள் மட்டுமே பின் தொடர்ந்து வர வேண்டும்.

2. அமமுக கட்சியினரின் இதர வாகனங்கள் பின்தொடர்ந்து வர அனுமதி இல்லை. அவ்வாகனங்கள் வழியிலேயே நிறுத்தப்படும்.

3. சசிகலா உள்பட யாரும் அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்துவது விதி மீறல்கள் ஆகும்.

4. ஒவ்வொரு வரவேற்பு இடத்திலும் அங்கு உள்ள கூட்டத்தில் 10 சதவீத அளவு சீருடை அணிந்த அமமுக தொண்டர்கள் நிறுத்தி கூட்டத்தை ஒழுங்கு படுத்திட வேண்டும்.

5. பட்டாசு வெடிப்பதற்கும் பேண்ட் வாத்தியங்கள் இசைப்பதற்கும் அனுமதி இல்லை. கொடி தோரணங்கள், பேனர்கள் மற்றும் பிளெக்ஸ் பேனர்கள் அனுமதியின்றி வைக்கக் கூடாது.

6. விதி முறைகளை மீறும்பட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.