Type Here to Get Search Results !

பட்ஜெட் குறித்து பொய் பரப்பும் எதிர்கட்சிகள்.... நிதி அமைச்சர் நிர்மலா தாக்கு

 


மத்திய பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்யசபாவில் பேசியதாவது: இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டை, தொழிலதிபர்களுக்கு ஆதரவான பட்ஜெட்டாக காட்ட எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. பட்ஜெட்டில் உள்ள உண்மை தகவலை மறைத்து பொய் தகவலை பரப்பி வருகின்றனர். ஏழை மக்களுக்கு நாங்கள் செய்ததையும், அவர்களின் நலனுக்காகவும், நாட்டின் தேவைக்காகவும் நாங்கள் செய்த பணிகளை மறைத்து, பொய்யான தகவலை பரப்புவதை எதிர்க்கட்சிகளுக்கு வழக்கமாகிவிட்டது. பணக்காரர்களுக்காக மட்டுமே மத்திய அரசு செயல்படுகிறது என பொய்யாக குற்றம்சாட்டுவதை அவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். சுயசார்புக்கான பட்ஜெட். சிறந்த பட்ஜெட் .

800 மில்லியன் பேருக்கு இலவச உணவு தானியம் வழங்கப்பட்டது. 80 மில்லியன் பேருக்கு இலவச காஸ் சிலிண்டர் வழங்கப்பட்டது. விவசாயிகள், பெண்கள், ஏழை மக்கள் என 400 மில்லியன் பேருக்கு, நிதியுதவி நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.

பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 1.67 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இது பணக்காரர்களுக்கானதா? 2017 அக்., முதல் 2.65 கோடி வீடுகளுக்கு பிரதமர் சவுபாக்யா யோஜனா திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசு மின்னணு மார்க்கெட் மூலம் 8,22077கோடி அளவுக்கு கொள்முதல் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. அவை, சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு தான் வழங்கப்பட்டன. பணக்காரர்களுக்கு ஆதரவான அரசு என்றால் ஊரக சாலைகளுக்கு பணம் செலவு செய்யப்படுமா?

பட்ஜெட்டில் தைரியமாக பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பங்கு முதலீட்டு முடிவுக்காக மத்திய அரசை சில மீடியாக்கள் பாராட்டுகின்றன. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு ஊக்கம் அளிப்பது ஏழைகளுக்கு உதவவே, பணக்காரர்களுக்காக அல்ல. தொழிலதிபர்கள், வருமான வரி செலுத்துபவர்களை மத்திய அரசு மதிக்கிறது. தொழில்துறை வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பட்ஜெட்டில் அம்சங்கள் உள்ளன. விவசாயிகள் நலனை காத்திட மோடி அரசு உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.