Type Here to Get Search Results !

அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் கருத்துக்கணிப்பு.... மோடி அரசு சாதனை

 


அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள் ஆவர். அமெரிக்க தேர்தலில் இவர்களது வாக்கு மிகவும் முக்கியமானது. பல இந்தியர்கள் அமெரிக்க அரசியலில் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றனர்.

கார்னிஜி சர்வதேச அமைதி எண்டோமென்ட், ஜான் ஹாப்கின்ஸ், பென்சில்வேனியா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து ஓர் ஆன்லைன் கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் 1200-க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்றனர். இவர்களில் 90 சதவீதம் பேர், இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். டொனால்ட் டிரம்ப் ஆட்சிகாலத்தில் அமெரிக்காவில் இஸ்லாமியர்களுக்கு விதிக்கப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாட்டை 60 சதவீதம் பேர் எதிர்த்தனர்.

49 சதவீதம் பேர் சிஏஏ-வை எதிர்த்துள்ளனர். இந்தியர்களில் 45 சதவீதம் பேர் இந்தியாவில் மோடி அரசால் அமல்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இஸ்லாமியர்கள் எப்படி சிறுபான்மையினராக உள்ளனரோ அதேபோல அமெரிக்காவில் இந்துக்கள் சிறுபான்மையினர் ஆவர்.

இவர்கள் கூறுகையில், அமெரிக்காவில் பூர்வகுடிகளான வெள்ளை இன மக்கள் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை எதிர்ப்பது ஆபத்தானது என்று தெரிவித்துள்ளனர். அமெரிக்க வெள்ளை இன ஆதரவாளர்கள் பெரும்பாலும் குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்களாகவே உள்ளனர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறுபவர்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்களாக உள்ளனர்.

சீனாவுக்கு எதிரான மோடி அரசின் ராணுவ பலத்தை 38 சதவீத அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இந்தியர்கள் ஆதரித்துள்ளனர். கடந்த திங்களன்று இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் சர்வதேச சட்டம் ஒழுங்கு குறித்து விவரித்துள்ளார். அமெரிக்கவாழ் இந்தியர்களில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்களது எண்ணிக்கை அதிகம். இந்த கருத்துக்கணிப்பில் 50 சதவீத அமெரிக்க வாழ் இந்தியர்கள் மோடி அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர். 12 சதவீதம் மக்கள் மட்டுமே காங்கிரசுக்கு ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.