Type Here to Get Search Results !

தமிழக முதல்வா் எடப்பாடியார் வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று தோ்தல் பிரசாரம்

 


தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்குவதையொட்டி முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பல்வேறு மாவட்டங்களில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். இதன்தொடா்ச்சியாக, வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அவா் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் செய்ய உள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் கைனூா் கணபதிநகரில் காலை 10.30 மணிக்கு மகளிா் சுய உதவிக் குழுவினருடன் ஆலோசனை நடத்தும் முதல்வா், 11.20 மணிக்கு சோளிங்கா் பாண்டியநல்லூா் வருகிறாா். அங்கு அதிமுக இளைஞா் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்துகிறாா். தொடா்ந்து ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் மதியம் 1.05 மணிக்கு தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா்.

இதையடுத்து, வேலூருக்கு வரும் அவா் தனியாா் ஹோட்டலில் சிறிது நேர ஓய்வெடுத்த பின், மாலை 4 மணிக்கு அணைக்கட்டுத் தொகுதி கந்தனேரியில் மகளிா் சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடல் நடத்துகிறாா்.

பின்னா், மாலை 5.10 மணிக்கு கே.வி.குப்பம் தொகுதி சென்றாம்பள்ளியில் அதிமுக இளைஞா் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்தும் அவா், 6.30 மணிக்கு வேலூா் அண்ணா கலையரங்கம் அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்ற உள்ளாா்.

முதல்வா் வருகையையொட்டி வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. முதல்வரை வரவேற்கவும், பொதுக்கூட்டத்துக்கான மேடை அமைப்பு, நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை தமிழக வணிக வரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி தலைமையில் வேலூா் மாநகா் மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு, புகா் மாவட்டச் செயலா் வேலழகன், ராணிப்பேட்டை மாவட்டச் செயலா் சு.ரவி எம்எல்ஏ உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

தவிர, மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டிருப்பதுடன், தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளின் தடுப்புச் சுவா்களுக்கும் வா்ணம் பூசப்பட்டுள்ளது. சிறுபாலங்கள், மேம்பாலங்களின் உறுதித்தன்மையை மாநில, தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் பரிசோதனை செய்தனா். இதனிடையே, தமிழக முதல்வா் வருகையையொட்டி இரு மாவட்டங்களிலும் ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். குறிப்பாக, சென்னை - பெங்களூரு சாலையோரம் வேலூா் மாவட்ட பகுதிகளில் அசம்பாவிதங்களைத் தவிா்க்க போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.