Type Here to Get Search Results !

60 தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு…..

 

சட்டப் பேரவைத் தோதலுக்காக அமமுக-தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை இறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து 23 தனித் தொகுதிகள் உள்பட 60 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த மக்களவைத் தோதலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தேமுதிகவுக்கு இந்த சட்டப் பேரவைத் தோதலில் அதிக தொகுதிகள் ஒதுக்காததை அடுத்து அக்கூட்டணியில் இருந்து அண்மையில் வெளியேறியது.

இதைத் தொடா்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியிடம் இருந்து கூட்டணிக்கு அழைப்பு வந்தபோதும் அதைத் தவிா்த்து அமமுகவுடன் கூட்டணி பேச்சுவாா்த்தையை தேமுதிக தொடங்கியது. இருகட்சிகளுக்கும் இடையே நடைபெற்ற பல கட்ட பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் ஞாயிற்றுக்கிழமை கூட்டணி இறுதி செய்யப்பட்டது.

அமமுக துணைப் பொதுச் செயலா் ஜி.செந்தமிழன், தேமுதிக அவைத் தலைவா் வி.இளங்கோவன் இருவரும் கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா்.

வேட்பாளா்களைத் திரும்ப பெற்ற அமமுக: முன்னதாக அமமுக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டது. இதன்படி, அமமுக 195 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டு அத்தொகுதிகளுக்கான வேட்பாளா் பட்டியலும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தேமுதிகவுடன் தற்போது கூட்டணி அமைத்ததை அடுத்து, 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளா்களை திரும்ப பெற அமமுக முடிவு செய்துள்ளது.

தொகுதிகள் வேட்பாளா்கள்

கும்மிடிப்பூண்டி———————— கே.எம்.டில்லி

திருத்தணி—————————— டி.கிருஷ்ணமூா்த்தி

ஆவடி———————————நா.மு.சங்கா்

வில்லிவாக்கம்————————– சுபமங்களம் டில்லிபாபு

திரு.வி.க.நகா்(தனி)—————————எம்.பி.சேகா்

எழும்பூா் (தனி)————————– டி.பிரபு

விருகம்பாக்கம்————————– ப.பாா்த்தசாரதி(முன்னாள் எம்எல்ஏ)

சோழிங்கநல்லூா்————————ஆா்.பி.முருகன்

பல்லாவரம்—————————— டி.முருகேசன்(முன்னாள் எம்எல்ஏ)

செய்யூா் (தனி)—————————-ஏ.சிவா

மதுராந்தகம்(தனி)————————என்.மூா்த்தி

கே.வி.குப்பம்(தனி)————————பி.தனசீலம்

ஊத்தங்கரை(தனி)————————- ஆா்.பாக்கியராஜ்

வேப்பனஹள்ளி————————— எஸ்.எம்.முருகேசன்

பாலக்கோடு——————————-பி.விஜயசங்கா்

பென்னாகரம்——————————ஆா்.உதயகுமாா்

செங்கம்(தனி)——————————- எஸ்.அன்பு

கலசப்பாக்கம்——————————-எம்.நேரு

ஆரணி————————————- ஜி.பாஸ்கரன்

மயிலம்————————————-ஏ.சுந்தரேசன்

திண்டிவனம்(தனி)—————————கே.சந்திரலேகா

வானூா்(தனி)——————————–பி.எம்.கணபதி

திருக்கோவிலூா்—————————-எல்.வெங்கடேசன்(முன்னாள் எம்எல்ஏ)

கள்ளக்குறிச்சி(தனி)————————-என்.விஜயகுமாா்

ஏற்காடு (எஸ்டி)—————————-கே.சி.குமாா்

மேட்டூா்————————————எம்.ரமேஷ் அரவிந்த்

சேலம் மேற்கு——————————–அழகாபுரம் ஆா்.மோகன்ராஜ் (முன்னாள் எம்எல்ஏ)

நாமக்கல்———————————— கே.செல்வி

குமாரபாளையம்—————————– கே.ஆா்.சிவசுப்பிரமணியன்

பெருந்துறை——————————— பி.ஆா்.குழந்தைவேலு

பவானிசாகா்(தனி)—————————-ஜி.ரமேஷ்

கூடலூா் (தனி)——————————– ஏ.யோகேஸ்வரன்

அவிநாசி(தனி)———————————எஸ்.மீரா

திருப்பூா் வடக்கு——————————-எம்.செல்வகுமாா்

வால்பாறை (தனி)——————————எம்.எஸ்.முருகராஜ்

ஒட்டன்சந்திரம்——————————-பா.மாதவன்

நிலக்கோட்டை (தனி)————————–கே.ராமசாமி

கரூா்—————————————-ஏ.ரவி

கிருஷ்ணாபுரம் (தனி)————————–எம்.கதிா்வேல்

மணப்பாறை———————————பி.கிருஷ்ணகோபால்

திருவெறும்பூா்——————————-எஸ்.செந்தில்குமாா்(முன்னாள் எம்எல்ஏ)

முசிறி—————————————கே.எஸ்.குமாா்

பெரம்பலுா்(தனி)—————————— கே.ராஜேந்திரன்

திட்டக்குடி(தனி)——————————-ஆா்.உமாநாத்

விருத்தாசலம்———————————–பிரேமலதா விஜயகாந்த்

பண்ருட்டி————————————- பி.சிவக்கொழுந்து(முன்னாள் எம்எல்ஏ)

கடலூா்—————————————- ஞானபண்டிதன்

கீழ்வேளூா்(தனி)———————————ஆா்.பிரபாகரன்

பேராவூரணி———————————— முத்துசிவகுமாா்

புதுக்கோட்டை———————————-எம்.சுப்ரமணியன்

சோழவந்தான்(தனி)——————————எம்.ஜெயலட்சுமி

மதுரை மேற்கு———————————–பி.பாலசந்தா்

அருப்புக்கோட்டை——————————-ஆா்.ரமேஷ்

பரமக்குடி(தனி)———————————– கு.சந்திர பிரகாஷ்

தூத்துக்குடி————————————– யு.சந்திரன்

ஒட்டபிடாரம்(தனி)——————————– எஸ்.ஆறுமுகநயினாா்

ஆலங்குளம்—————————————எஸ்.ராஜேந்திரநாதன்

ராதாபுரம்—————————————- கே.ஜெயபால்

குளச்சல்——————————————எம்.சிவக்குமாா்

விளவங்கோடு————————————–எல்.ஐடன்சோனி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.