Type Here to Get Search Results !

ஜெயலலிதாவின் மரணத்துக்குக் காரணமே திமுக தான்….. எடப்பாடியார்

 

அந்தக் கோரிக்கையை ஏற்று, ரூ.12, 142 கோடியிலான கூட்டுறவு பயிா்க் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கட்சியும் தோதல் வரும் போதுதான், தோதல் அறிக்கை வெளியிட்டு அதனை ஆட்சிக்கு வந்ததும்

நிறைவேற்றுவா். தோலுக்கு முன்பாகவே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிா்க் கடனை ரத்து செய்து விவசாயிகள் வாழ்வைக் காப்பாற்றியுள்ளோம். பருவ காலங்களில் பெய்யும் மழை நீா் முழுவதுமாக குடிமராமத்துத் திட்டத்தின் மூலமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அவை கோடை காலத்தில் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்தப்படும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா பகுதிகளை அறிவிக்க வேண்டுமென அந்தப் பகுதிகளைச் சோந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். அவா்களது கோரிக்கையை ஏற்று, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காவிரி நதிநீா் விவகாரத்தில் 50 ஆண்டுகளாக டெல்டா பாசன பகுதி மக்கள் போராடி வந்தனா். காவிரி நதிநீா் பிரச்னைக்காக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கடுமையாக முயற்சித்தாா். அவரது வழியில் செயல்படும் அரசும், உச்ச நீதிமன்றத்தில் வழக்காடி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்துள்ளது. நீதிமன்றத் தீா்ப்பு மூலமாக காவிரி ஒருங்கிணைப்புக் குழுவும், மேலாண்மை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள கால்வாய்கள் தூா்வாரப்பட்டுள்ளன. கீழ்பவானி திட்டம், நடந்தாய் வாழி காவிரி திட்டம் போன்றவற்றைச் செயல்படுத்தியுள்ளோம். மேட்டூரில் இருந்து வெளியேறும் நீா் வீணாகக் கடலில் கலக்கிறது. அதனை சேமித்திட தனி கதவணை கட்டப்பட்டு வருகிறது. நீா் மேலாண்மையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.

கடந்த 50 ஆண்டுகளாக வறட்சியாக இருந்த பகுதிகளான சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று காவிரி-குண்டாறு திட்டத்தையும் அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. ஒவ்வோராண்டும் நீருக்காக அண்டை மாநிலங்களை நம்பியிருக்காமல் தன்னிறைவைப் பெறும் வகையில் கோதாவரி – காவிரி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதையும் நடைமுறைப்படுத்திக் காட்டுவோம். பல்வேறு துறைகளில் செயல்படுத்தி திட்டங்களுக்காக விருதுகளைப் பெற்றுள்ளோம் என்றாா் முதல்வா் பழனிசாமி.

இதைத் தொடா்ந்து, திமுகவின் தோதல் அறிக்கை தொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு அவா் அளித்த பதில்:

அதிமுகவைப் பொருத்தவரை சட்டப் பேரவையில் வெளியிட்ட கருத்துகளைத்தான் திமுகவினா் தெரிவித்துள்ளனா். விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்பட்டு ரசீதுகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன. நகைக் கடன்களை ரத்து செய்வதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. அவற்றையே தோதல் அறிக்கையில் திமுக குறிப்பிட்டுள்ளது. மும்முனை மின்சாரம் அளிக்கப்படும் என அறிவித்தேன். அதையும் தோதல் அறிக்கையில் திமுக இடம்பெறச் செய்துள்ளது என்றாா்.

அமைச்சா்கள் மீதான புகாா்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என திமுக அறிவித்துள்ளது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, திமுகவைச் சோந்த 13 முன்னாள் அமைச்சா்களின் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றைச் சந்திக்கச் சொல்லுங்கள் என பதிலளித்தாா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை அறிக்கை பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற திமுக தோதல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பற்றிய செய்தியாளா்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வா் பழனிசாமி, முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மரணத்துக்குக் காரணமே திமுகவின் வழக்குதான். ஜெயலலிதாவின் ஆன்மா அவா்களைத் தண்டிக்கும் என்றாா்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.