Type Here to Get Search Results !

என் அன்பு மனைவிக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள்….

 

என் அன்பு மனைவிக்கு மகளிர் தின
நல்வாழ்த்துக்கள்….
வாலிப வயது வந்தவுடன்
வாழ்கையை முடிவு செய்து
வளர்த்த வீட்டை மறந்து-இன்பமாய்
வாழ்ந்திட துடித்திடுவாள் என் அன்பு மனைவி ரெஜிதா……
பெற்றோரின் முன்னிலையில்
பேரின்பம் காண வேண்டி
பொறுமையாய்  இருந்திடுவாள்-ஆதலால்
பெண்மையை காத்திடுவாள் என் அன்பு மனைவி
திருமணம் முடிந்ததும்
திரும்பியே கையசைத்து
விரும்பிய வாழ்க்கைக்கு-கணவருடன்
விருப்பமுடன் சென்றிடுவாள்
எண்ணியதை தந்திடுவாள்
எண்ணமதை அறிந்திடுவாள்
கண்குளிர அமர்ந்து கொஞ்சி-அவனின்
கண்மூடி விளையாடிடுவாள் என் அன்பு மனைவி
பொன்னே மணியே என்று
போதையை ஏற்றிடுவாள்
பெண்மையை தருவதற்கு-நித்தம்
பொறுமையை வென்றிடுவாள் என் அன்பு மனைவி.
அன்புடன் தந்திடுவாள்
ஆசையாய் உணவளிப்பாள்
அத்தனையும் பகிர்ந்துவிட்டு
அருகிலேயே துணையிருப்பாள் என் அன்பு மனைவி….
அவள்தான்  என் அன்பு மனைவி ! ஆயுட்காலத் என் அன்பு துணைவி !!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.