Type Here to Get Search Results !

திமுக வாரிசுகளுக்கு வாய்ப்பு வாரி வழங்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6ஆம் தேதி நடைபெற உள்ளது. முக்கிய கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. திமுக கூட்டணியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும் ,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 3 தொகுதிகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக மட்டும் 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

173 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை நேற்று முகஸ்டாலின் வெளியிட்டார். அதில் வாரிசுகளுக்கு வாய்ப்பு வாரி வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி, மறைந்த பேராசிரியர் அன்பழகனின் பேரன் வெற்றியழகன் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாரிசு வேட்பாளர்களின் பட்டியல் :

மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் – சேப்பாக்கம் தொகுதி

ஐ பெரியசாமி மகன் செந்தில்குமார் – பழனி தொகுதி

பொய்யாமொழி மகன் மகேஷ் – திருவறும்பூர் தொகுதி

க அன்பழகன் பேரன் வெற்றி அழகன் – வில்லிவாக்கம் தொகுதி

தூத்துக்குடி பெரியசாமி மகன் கீதாஜீவன் – தூத்துக்குடி தொகுதி

ஆலடி அருணா மகள் பூங்கோதை – ஆலங்குளம் தொகுதி

தங்கபாண்டியன் மகன் தங்கம்தென்னரசு – திருச்சுழி தொகுதி

டி ஆர் பாலு மகன் ராஜா – மன்னார்குடி தொகுதி

பி டி ஆர் பழனிவேல் ராஜன் மகன் தியாகராஜன் – மதுரை மத்திய தொகுதி

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.